விளையாட்டு

கூடைப்பந்து இறுதி சுற்றில் தமிழகம்

செய்திப்பிரிவு

சென்னை: 75-வது சீனியர் தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.

இதில் மகளிருக்கான அரை இறுதியில் நேற்று கேரளா - மத்திய பிரதேசம் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் கேரளா 87- 58 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டியில் கேரள அணி, இந்தியன் ரயில்வே அணியை எதிர்கொள்கிறது.

இந்தியன் ரயில்வே அணி அரை இறுதி ஆட்டத்தில் 88- 54 என்ற கணக்கில் தமிழகத்தை வீழ்த்தியது. இந்தியன் ரயில்வே அணி சார்பில் புஷ்பா செந்தில் குமார் 22 புள்ளிகளை குவித்தார். தமிழக அணி சார்பில் அஷ்மிதா 19 புள்ளிகள் சேர்த்தார்.

ஆடவர் பிரிவு அரை இறுதியில் தமிழக அணி 102- 53 என்ற கணக்கில் உத்தரபிரதேச அணியை தோற்கடித்தது. தமிழக அணி தரப்பில் முயின் பெக் ஹபிஸ் 22 புள்ளிகளையும், அரவிந்த் குமார் முத்து கிருஷ்ணன் 18 புள்ளிகளையும் குவித்தனர்.

SCROLL FOR NEXT