விளையாட்டு

தமிழக கிரிக்கெட் வீரர் சாய் சுதர்ஷனுக்கு காயம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக கிரிக்கெட் வீரர் சாய் சுதர்ஷனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வரும் விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் தொடரில் தமிழக அணியில் சாய் சுதர்ஷன் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் மத்தியப் பிரதேச அணிக்கும் தமிழ்நாடு அணிக்கும் கடந்த மாதம் 26-ம் தேதி லீக் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின் போது சாய் சுதர்ஷனின் விலா எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள் காயம் குணமாக ஒரு மாதம் ஆகும் எனத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர் ஓய்வில் உள்ளார். இதனால் அடுத்து வரும் விஜய் ஹசாரே போட்டிகள், ரஞ்சிப் போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால், மார்ச் மாதம் தொடங்கும் ஐபிஎல் தொடருக்குள் அவர் குணமடைந்து விடுவார் என தமிழக கிரிக்கெட் சங்க வட்டாரங்கள் தெரிவித்தன. விஜய் ஹசாரே தொடரில் தமிழக அணி 4 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT