விளையாட்டு

டி20 உலக கோப்பை கிரிக்கெட்: இத்தாலி அணி அறிவிப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்​கெட் போட்டியில் பங்​கேற்​கும் இத்​தாலி அணி நேற்று அறிவிக்கப்​பட்​டது. ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்​கெட் போட்டி பிப்​ர​வரி 7-ம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதி வரை இந்தியா மற்​றும் இலங்​கை​யில் நடக்​கிறது. இதில் 20 நாடுகள் பங்கேற்கின்றன.

இந்​தப் போட்​டி​யில் முதல் முறை​யாக விளை​யாட இருக்கும் இத்​தாலி அணி நேற்று அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. தென் ஆப்​பிரிக்க முன்​னாள் கிரிக்​கெட் வீரர் ஜே.ஜே.ஸ்மட்ஸ் இடம்​பெற்​றுள்ள 15 பேர் கொண்ட அணிக்கு வெய்ன் மேட்​சன் கேப்​ட​னாக நியமிக்​கப்​பட்டு உள்​ளார்.

ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்​டி​யில் பங்கேற்​கும் இத்​தாலி அணி வீரர்​கள் விவரம்: வெய்ன் மேட்சன் (கேப்​டன்), ஜைன் அலி, மார்​கஸ் காம்​போபி​யானோ, அலி ஹசன், கிரிஷன் கலுகமகே, ஹாரி மானென்​டி, ஜியான் பியோரோ, அந்​தோனி மோஸ்​கா, ஜஸ்டின் மோஸ்​கா, சையத் நக்​வி, பெஞ்​சமின் மானென்​டி, ஜஸ்​பிரீத் சிங், ஜே.ஜே. ஸ்மட்​ஸ், கிரான்ட் ஸ்டூவர்ட், தாமஸ் டிரா​கா. ஐசிசி உலகக் கோப்பை போட்​டி​யில் பங்கேற்பதற்காக இது​வரை இது​வரை 15 நாடு​களின் அணி​கள் அறிவிக்​கப்​பட்டு விட்​டன.

SCROLL FOR NEXT