விராட் கோலி | உள்படம்: சுனில் கவாஸ்கர்

 
விளையாட்டு

“இளம் வீரர்கள் கோலியின் ஆட்ட பாணியை பின்பற்ற வேண்டும்” - சுனில் கவாஸ்கர் கருத்து

வேட்டையன்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர்கள், விராட் கோலியின் ஆட்ட பாணியை பின்பற்றி விளையாட வேண்டுமென முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் சொந்த மண்ணில் முதல் முறையாக நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இழந்தது இந்திய கிரிக்கெட் அணி. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரின் கடைசி ஆட்டத்தில் 41 ரன்களில் தோல்வியடைந்தது இந்திய அணி. இந்த ஆட்டத்தில் 108 பந்துகளில் 124 ரன்கள் எடுத்திருந்தார் விராட் கோலி. அவருக்கு உறுதுணையாக மற்றொரு பேட்ஸ்மேன் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடி இருந்தால் 338 ரன்கள் இலக்கை இந்தியா எட்டி இருக்கும்.

          

இந்த சூழலில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர், இந்த தொடர் குறித்து தனது கருத்தை பகிர்ந்துள்ளார். “விராட் கோலிக்கு சரியான சப்போர்ட் இல்லை என்றால் பெரிய இலக்கை எட்டுவது கடினம். கடந்த ஆட்டத்தில் அவருக்கு களத்தில் சக பேட்ஸ்மேன்களுடன் கொடுத்த சப்போர்ட் சொற்ப அளவில் இருந்தது. இந்த தொடரில் இந்திய அணி எதிர்கொண்ட பிரச்சினை என்னவென்றால் சிறந்த தொடக்கம் கொடுக்க முடியாததுதான். சிறந்த தொடக்கம் கிடைத்தால் பாதி வேலை முடிந்தது என சொல்வதுண்டு.

மூன்றாவது போட்டியில் வெற்றிக்கான ரன்களில் சரிபாதி இலக்கை இந்திய அணி எட்டிய போது 10 விக்கெட்டுகளில் பாதியை இழந்திருந்தோம். சிறந்த பார்மில் இருக்கும் கே.எல்.ராகுலை இழந்தது, நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா ஆகியோர் அரை சதம் கடந்திருந்தாலும் இலக்கை எட்டுவது சவாலாக இருந்தது. ஏனெனில், நிதிஷ், ஹர்ஷித் ராணா ஆகியோர் இப்படி ஆடுவார்கள் என நம்மால் உறுதியாக சொல்ல முடியாது.

ஒரு பிம்பத்துக்குள் கோலியை நாம் கட்டமைக்க முடியாது. ‘என் பணி ரன் சேர்ப்பது’ என அவர் விளையாடி வருகிறார். அவர் இப்படித்தான் ஆடுவார் என நாம் எதிர்பார்க்க முடியாது. இன்னிங்ஸை நிதானமாக கட்டமைப்பது, அதிரடியாக தொடங்கி பின்னர் ரன் குவிப்பில் கவனம் செலுத்துவது என அவரது ஆட்டம் கள சூழலுக்கு ஏற்ப இருக்கும். இளம் வீரர்கள் இதை பின்பற்ற வேண்டும். கோலியின் ஆட்டம் இளம் வீரர்களுக்கு ஒரு பாடம். ஹர்ஷித் ராணா சிறப்பாக விளையாடி இருந்தார்” என்றார்.

SCROLL FOR NEXT