ஃபுல்லர்டன்: யுஎஸ் ஓபன் பாட்மிண்டன் தொடர் அமெரிக்காவின் ஃபுல்லர்டன் நகரில் நடைபெற்றது. இதன் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி சுற்றில் தரவரிசையில் 38-வது இடத்தில் உள்ள இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், 46-வது இடத்தில் உள்ள சீன தைபேவின் சு லி-யங்குடன் மோதினார். இதில் ஸ்ரீகாந்த் 15-21, 21-16, 9-21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தார். இந்த ஆட்டம் 61 நிமிடங்கள் நடைபெற்றது.