

சென்னை: ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் கடந்த 24-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை மாநிலங்களுக்கு இடையேயான தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
இந்த தொடரில் தமிழகத்தில் இருந்து ஆடவர் பிரிவில் 41 பேரும், மகளிர் பிரிவில் 36 பேரும் பங்கேற்றிருந்தனர். இதில் 9 தங்கம், 9 வெள்ளி, 2 வெண்கலம் வென்ற தமிழகம் 138 புள்ளிகளை குவித்து ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.
இந்தத் தொடரில் தமிழ்நாட்டின் முன்னணி வீரர்களான டி.கே.விஷால் (400 மீட்டர்), வித்யா ராம்ராஜ் (400 மீட்டர் தடை ஓட்டம்), பிரவீன் சித்ரவேல் (மும்முறை தாண்டுதல்) ஆகியோர் தங்கப் பதக்கம் வென்று அசத்தியிருந்தனர்.