விளையாட்டு

கடைசி ஒரு​நாள் போட்டியில் இலங்கை - இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை

செய்திப்பிரிவு

கொழும்பு: இங்​கிலாந்து கிரிக்​கெட் அணி இலங்​கை​யில் சுற்​றுப்​பயணம் செய்து விளை​யாடி வரு​கிறது. இரு அணிகள் இடையி​லான 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் கிரிக்கெட் போட்​டித் தொடரில் முதல் ஆட்​டத்​தில் இலங்கை அணி 19 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்றது.

தொடர்ந்து நடை​பெற்ற 2-வது ஆட்​டத்​தில் இங்​கிலாந்து அணி 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்றிருந்தது. இதனால் தொடர் 1-1 என சமநிலை​யில் உள்ளது. இந்​நிலை​யில் தொடரை வெல்​வது யார் என்​பதை தீர்​மானிக்​கும் வகை​யில் அமைந்​துள்ள 3-வது மற்​றும் கடைசி ஒரு​நாள் போட்டி பிரேம​தாசா மைதானத்​தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடை​பெறுகிறது.

          

இலங்கை அணி கடந்த 5 வருடங்​களாக சொந்த மண்​ணில் ஒரு​நாள் போட்​டித் தொடரை இழக்​காமல் உள்​ளது. இந்த சாதனையை அந்த அணி தொடரச் செய்​வ​தில் தீவிரம் காட்​டக்​கூடும்.

எனினும் அந்த அணிக்கு இங்​கிலாந்து அணி​யின் சீனியர் பேட்​ஸ்​மே​னான ஜோ ரூட் சவால் அளிக்​கக்​கூடும். ஏனெனில் சுழலுக்கு சாதக​மான ஆடு​களத்​தில் ஜோ ரூட் நேர்த்​தி​யாக விளை​யாடக்​கூடியவர். நடப்பு தொடரில் இரு ஆட்​டங்​களி​லும் அவர், முறையே 61 மற்​றும் 75 ரன்​கள் சேர்த்திருந்தார்.

SCROLL FOR NEXT