விளையாட்டு

பயிற்சி ஆட்டத்தில் இலங்கை பிரதமர் லெவன் 363 ரன்கள் குவிப்பு | SL vs IND

செய்திப்பிரிவு

கொழும்பு: இந்​திய கிரிக்கெட் அணி 3 நாட்​கள் கொண்ட பயிற்சி ஆட்​டத்​தில் நேற்று இலங்கை பிரதமர் லெவன் அணி​யுடன் மோதியது. முதலில் பேட் செய்த பிரதமர் லெவன் அணிக்கு நிஷான் பெர்​னாண்​டோ, ரவிந்து ரசந்தா ஜோடி அற்​புத​மான தொடக்​கம் கொடுத்​தது. இரு​வரும் சிறப்​பாக விளை​யாடி அரை சதம் அடித்தனர்.

நிஷந்தா பெர்​னாண்டோ 65 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 11 பவுண்டரி​களு​டன் 66 ரன்​கள் எடுத்த நிலை​யில் ரன் அவுட் ஆனார். முதல் விக்​கெட்​டுக்கு நிஷந்தா பெர்​னாண்​டோ, ரவிந்து ரசந்தா ஜோடி 20.4 ஓவர்​களில் 110 ரன்​கள் சேர்த்​தது. இதையடுத்து களமிறங்​கிய பசிந்து சூரியபண்​டாரா 63 பந்​துகளில், 6 பவுண்டரிகளு​டன் 35 ரன்​கள் எடுத்த நிலை​யில் ரவீந்​திர ஜடேஜா பந்​தில் போல்​டா​னார்.

நிதான​மாக பேட் செய்த ரவிந்து ரசந்தா 143 பந்​துகளில், ஒரு சிக்ஸர், 6 பவுண்​டரி​களு​டன் 71 ரன்​கள் சேர்த்த நிலை​யில் மானவ் சுதார் பந்​தில் விப்​நி​காமிடம் பிடி​கொடுத்து வெளி​யேறி​னார். இதைத் தொடர்ந்து களமிறங்​கிய பவன் ரத்​னாயகே 39, அஹான் விக்​ரமசிங்கே 31, அஞ்​ஜலா பண்​டாரா 13, ரமேஷ் மெண்​டிஸ் 32 ரன்​களில் நடையை கட்​டினர். கேப்​டன் சோனல் தினுஷா 72 பந்துகளில், ஒரு சிக்​ஸர், 5 பவுண்​டரி​களு​டன் 52 ரன்​கள் எடுத்த நிலை​யில் மானவ் சுதார் பந்​தில் எல்​பிடபிள்யூ முறை​யில் ஆட்டமிழந்​தார்.

முதல் நாள் ஆட்​டத்​தின் முடி​வில் இலங்கை பிரதமர் லெவன் அணி 90 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 363 ரன்​கள் குவித்​தது. கேஷரா நுவந்தா 9, திலும் சுதீரா ஒரு ரன்​னுடன் களத்​தில் இருந்தனர். இந்​திய அணி தரப்​பில் சுழற்​பந்து வீச்​சாளர்​களான ரவீந்​திர ஜடேஜா, குல்​தீப் யாதவ், மானவ் சுதார் ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை வீழ்த்​தினர். வேகப்​பந்து வீச்​சாள​ரான குர்​னூர் பிரார் ஒரு விக்​கெட் கைப்​பற்​றி​னார். இன்​று 2-வது நாள்​ ஆட்​டம்​ நடைபெறுகிறது.

ஷுப்மன் கில் காயம்

இதற்கிடையே நேற்று முன்தினம் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு வலது கை மோதிர விரலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர், நேற்று இலங்கை பிரதமர் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் களமிறங்கவில்லை. இதனால் கே.எல்.ராகுல் இந்திய அணியை வழிநடத்தினார். ஷுப்மன் கில்லின் காயத்தை பிசிசிஐ மருத்துவக்குழு கண்காணித்து வருகிறது.

SCROLL FOR NEXT