நியூ ஜெர்சி: அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் நடைபெற்ற பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணி16 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது 2-வது முறையாக வாகை சூடியுள்ளது.
48 அணிகள் பங்கேற்ற 2026-ம் ஆண்டு பிஃபா உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவின் இறுதிப் போட்டி அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள மெட்லைஃப் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. உலக சாம்பியன் பட்டத்தை தக்கவைக்கும் நோக்கில் லயோனல் மெஸ்ஸி தலைமையில் அர்ஜெண்டினாவும், 2010-க்குப் பிறகு மீண்டும் உலகக் கோப்பையை வெல்லும் கனவுடன் ஸ்பெயினும் பலப்பரீட்சை நடத்தின.
ஆட்டத்தின் முடிவில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணி 16 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது 2-வது முறையாக வாகை சூடியுள்ளது. ஸ்பெயின் அணி இதற்கு முன்பு கடந்த 2010-ல் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது