விளையாட்டு

6 விக்கெட்களை இழந்து தென் மண்டலம் அணி தடுமாற்றம்: முகமது ஷமி, முகேஷ் குமார் பந்துவீச்சில் அசத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: துலீப் டிராபி கிரிக்​கெட் தொடரின் இறு​திப் போட்டியில் கிழக்கு மண்டலம் - தென் மண்டலம் அணி​கள் விளையாடி வரு​கின்​றன. சென்னை சேப்​பாக்​கம் மைதானத்​தில் நடை​பெற்று வரும் இந்த போட்​டி​யில் டாஸ் வென்று பேட் செய்த கிழக்கு மண்​டலம் அணி நேற்று முன்​தினம் 2-வது நாள் ஆட்டத்தில் 163 ஓவர்​களில் 708 ரன்​கள் குவித்து முதல் இன்னிங்ஸில் ஆட்​ட​மிழந்​தது.

கேப்​டன் இஷான் கிஷன் 270 ரன்​களும், குமார் குஷாக்ரா 101 ரன்களும், ஷிகார் மோகன் 85 ரன்​களும் விளாசினர்​.வைபவ் சூர்​ய வன்ஷி 44, அனுகுல் ராய் 45, முகமது கவுனைன் குரேஷி 40 ரன்​கள் சேர்த்​தனர். தென் மண்​டலம் அணி தரப்​பில் ஸ்ரேயஸ் கோபால், ஷாமா மிலிந்த் ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை கைப்​பற்​றினர்.

3-வது நாளான நேற்று தென் மண்​டலம் அணி தனது பேட்​டிங்கை தொடங்​கியது. அந்த அணிக்கு தொடக்​கமே அதிர்ச்​சி​யாக இருந்தது. ரிக்கி புயி ஒரு ரன் எடுத்த நிலை​யில் முகேஷ் குமார் பந்தில், குமார் குஷாக்​ரா​விடம் கேட்ச் கொடுத்து வெளி​யேறி​னார். மற்​றொரு தொடக்க வீர​ரான நாராயணன் ஜெகதீசன் 42 பந்துகளில், 6 பவுண்​டரி​களு​டன் 32 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஷிகார் மோகன் பந்​தில் பேக்​வேர்டு பாயிண்ட் திசை​யில் அபிமன்யூ ஈஸ்​வரனிடம் பிடி​கொடுத்து ஆட்​ட​மிழந்​தார்.

ஷேக் ரஷீத் 27 ரன்​களில் முகமது ஷமி பந்​தில் எல்​பிடபிள்யூ ஆனார். 4-வது விக்​கெட்​டுக்கு தேவ்​தத் படிக்​கல்​லுடன் இணைந்த கேப்​டன் திலக் வர்மா சீராக ரன்​கள் குவித்​தார். நிதான​மாக பேட் செய்த தேவ்​தத் படிக்​கல் 104 பந்​துகளில், 4 பவுண்​டரி​களு​டன் 62 ரன்​கள் எடுத்த நிலை​யில் முகேஷ் குமார் பந்​தில் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து களமிறங்​கிய ரவிச்​சந்​திரன் சமரன் 23, ஸ்ரேயஸ் கோபால் 26 ரன்​களில் நடையை கட்​டினர்.

3-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் தென் மண்​டலம் அணி 80 ஓவர்களில் 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 242 ரன்​கள் எடுத்​தது. திலக் வர்மா 133 பந்​துகளில், 5 பவுண்​டரி​களு​டன் 56 ரன்​களும், ஷாமாமிலிந்த் 2 ரன்​களு​ட​னும் களத்​தில் இருந்​தனர். கிழக்கு மண்டலம் அணி தரப்​பில் முகமது ஷமி, முகேஷ் குமார் ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை வீழ்த்​தினர். முகமது கவுனைன் குரேஷி, ஷிகார் மோகன் ஆகியோர் தலா ஒரு விக்​கெட் கைப்பற்றினர்.

கைவசம் 4 விக்​கெட்​கள் இருக்க 466 ரன்​கள் பின்​தங்​கிய நிலையில் இன்று 4-வது நாள்​ ஆட்​டத்​தை எதிர்​கொள்​கிறது தென்​ மண்​டலம்​ அணி. அந்த அணி பாலோ-ஆனை தவிர்க்க மேற்கொண்டு 265 ரன்​கள் சேர்க்க வேண்​டும்​.

SCROLL FOR NEXT