கேப்டவுன்: தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப் டவுன் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி 329ரன்களும் ஆஸ்திரேலிய அணி429 ரன்களும் குவித்தன.
100 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 47 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்திருந்தது. மேத்யூ பிரீட்ஸ்கே 19, ரியான் ரிக்கெல்டன் 19 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 4-வது நாள் ஆட்டத்தை தென் ஆப்பிரிக்க அணி தொடர்ந்து விளையாடியது. மேத்யூ பிரீட்ஸ்கே 43 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து களமிறங்கிய வியான் முல்டர், ரியான் ரிக்கெல்டனுடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பை கட்டமைக்க முயற்சித்தார். ரியான் ரிக்கெல்டன் 101 ரன்களில் ஆட்டமிழந்தார். 131 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் தென் ஆப்பிரிக்க அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 371 ரன்கள் எடுத்திருந்தது. ரபாடா 2, வியான் முல்டர் 98 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ரியான் ரிக்கெல்டன்.