ஜோகன்னஸ்பர்க்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் டர்பனில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 214 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் அந்த அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
2-வது டெஸ்ட் போட்டி வரும் 18-ம் தேதி கெபர்காவில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் நீக்கப்பட்டு மேத்யூ ப்ரீட்ஸ்கே சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ரியான் ரிக்கெல்டன் செயல்படுவார் என தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்வாரியம் அறிவித்துள்ளது.
Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.