செஞ்சூரியன்: தென் ஆப்பிரிக்கா - வங்கதேசம் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியன் நகரில் நேற்று தொடங்கியது. மழை மற்றும் மைதான ஈரப்பதம் காரணமாக மதிய உணவு இடைவேளைக்கு பின்னரே போட்டி தொடங்கப்பட்டது. முதலில் பேட் செய்த வங்கதேச அணி 33.3 ஓவர்களில் 91 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அதிகபட்சமாக மஹ்பிஜூல் இஸ்லாம் 23, தவூஹித் ஹிர்தோய் 19, மொமினுல் ஹக் 18 ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் காகிசோ ரபாடா, மார்கோ யான்சன் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். இதையடுத்து பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 8 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் விக்கெட் இழப்பின்றி 46 ரன்கள் எடுத்திருந்தது.