வெலிங்டன் டெஸ்ட் போட்டியை டிரா செய்தது நியூஸிலாந்து: முடிவு கிடைக்காததால் இந்திய அணி ஏமாற்றம்

வெலிங்டன் டெஸ்ட் போட்டியை டிரா செய்தது நியூஸிலாந்து: முடிவு கிடைக்காததால் இந்திய அணி ஏமாற்றம்
Updated on: 
2 min read

வெலிங்டன்: நியூஸிலாந்து - இந்​திய அணிகள் இடை​யி​லான முதல் டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி வெலிங்​டனில் உள்ள பேசின் ரிசர்வ் மைதானத்​தில் நடை​பெற்று வந்​தது. இதன் முதல் இன்​னிங்​ஸில் நியூஸிலாந்து 368 ரன்​களும், இந்​தியா 720 ரன்​களும் குவித்​தன. 352 ரன்​கள் பின்​தங்​கிய நிலை​யில் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய நியூஸிலாந்து அணி 4-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 45 ஓவர்​களில் 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 119 ரன்​கள் எடுத்​தது.

கேப்​டன் டாம் லேதம் 0, ஹென்றி நிக்​கோல்ஸ் 31 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தனர். டெவன் கான்வே 59, ரச்​சின் ரவீந்​திரா 27 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தனர். நேற்று கடைசி நாள் ஆட்​டத்தை நியூஸிலாந்து அணி தொடர்ந்து விளை​யாடியது. டெவன் கான்வே 165 பந்​துகளில், 7 பவுண்​டரி​களு​டன் 65 ரன்​கள் எடுத்த நிலை​யில் வாஷிங்​டன் சுந்​தர் பந்​தில், ரிஷப் பந்த்​திடம் கேட்ச் கொடுத்து ஆட்​ட​மிழந்​தார்.

ரச்​சின் ரவீந்​திரா 129 பந்​துகளில், 4 பவுண்​டரி​களு​டன் 37 ரன்​கள் எடுத்த நிலை​யில் பிரசித் கிருஷ்ணா பந்​தில் வெளியேறினார். இதைத் தொடர்ந்து டாம் பிளண்​டல் 15 ரன்​களில் அன்​ஷுல் கம்​போஜ் பந்​தில் நடையை கட்​டினார். அப்​போது ஸ்​கோர் 77 ஓவர்​களில் 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 176 ஆக இருந்​தது- இதன் பின்​னர் ஆடுகளத்​தில் இருந்து எந்​த​வித​மான ஒத்​துழைப்​பும் இந்​திய பந்​து​வீச்​சாளர்​களுக்கு கிடைக்​க​வில்லை.

இதை சாதக​மாக பயன்​படுத்​திக் கொண்ட டேரில் மிட்​செல், கிளென் பிலிப்ஸ் ஜோடி இந்​திய பந்​து​வீச்சை திறம்​பட எதிர்​கொண்​டனர். இரு​வரும் விக்​கெட்டை இழக்​காமல் நிதானமாக விளை​யாடினர். இத​னால் நியூஸிலாந்து அணி 5 விக்​கெட் இழப்​புக்கு 239 ரன்​கள் எடுத்​திருந்​த​போது இரு அணி கேப்​டன்​களும் ஆட்​டத்தை டிராவில் முடிக்க ஒப்​புக்​கொண்​டனர்.

டேரில் மிட்​செல் 187 பந்​துகளில் 49 ரன்​களு​டனும், பிலிப்ஸ் 126 பந்​துகளில் 26 ரன்​களு​டனும் ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர். கடைசி நாளில் நியூஸிலாந்து வீரர்​கள் 75 ஓவர்​கள் விளை​யாடி 120 ரன்​கள் மட்​டுமே எடுத்​தனர். வெற்​றிக்​காக ரன் குவிப்​ப​தைவிட, விக்​கெட்​டுகளைப் பாது​காத்து ஆட்ட நேரத்தை முடிப்​ப​திலேயே அவர்​கள் கவனம் செலுத்​தினர்.

இந்​திய அணி தரப்​பில் பிரசித் கிருஷ்ணா 2 விக்​கெட்​களை வீழ்த்​தினார். ஜஸ்பிரீத் பும்ரா, அன்​ஷுல் கம்​போஜ், வாஷிங்​டன் சுந்​தர் ஆகியோர் தலா ஒரு விக்​கெட்டை கைப்​பற்​றினர். இந்​திய பந்​து​வீச்​சாளர்​கள் கடைசி வரை கடுமையாகப் போராடியபோதிலும், ஆடுகளம் பேட்​டிங்​கிற்கு சாதக​மாக இருந்​ததால் நியூஸிலாந்து அணி தோல்​வியைத் தவிர்த்​தது. இரு அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 27-ம் தேதி கிறைஸ்ட்சர்ச்சில் தொடங்​கு​கிறது.

‘இது வழக்கமான ஆடுகளம் இல்லை’

நியூஸிலாந்து அணி​யின் கேப்டன் டாம் லேதம் கூறும்​போது, “கடந்த சில ஆண்​டுகளாக பேசின் ரிசர்வ் மைதானத்​தில் காணப்​படும் வழக்​க​மான ஆடுகளமாக தற்​போது இல்லை. பொது​வாக

இங்​குள்ள ஆடுகளத்​தில் அடுத்​தடுத்த நாட்​களில் பந்​தின் வேகமும், பவுன்​ஸும் தொடர்ந்து இருக்​கும். ஆனால் இந்​தப் போட்​டி​யில் 2-வது நாளில் இருந்தே அந்​தத் தன்​மையைப் பார்க்க முடிய​வில்லை.

பந்​து​வீச்​சாளர்களுக்கு ஆடுகளம் போதிய ஒத்​துழைப்பை வழங்​காததால் முடிவை எட்​டுவது கடினமாகி​விட்​டது. முதல் நாளைத் தவிர, மற்ற நாட்​களில் கூகபுரா பந்து விரைவாக மென்​மையாகிவிட்​டது. இந்த விஷயத்​தில் இந்​திய அணி​யின் கேப்​டன் ஷுப்​மன் கில் கூறியது சரிதான். புதிய பந்​தில் முதல் 10 ஓவர்​கள் வரை மட்​டுமே பந்​து​வீச்​சாளர்​களுக்கு ஓரளவு சாதக​மான சூழல் இருந்​தது.

நியூஸிலாந்து மைதானங்​களில் பொது​வாக பந்து நீண்ட நேரம் கடினத்​தன்​மையுடன் இருக்​கும். இத​னால் அதிக பவுன்ஸ் கிடைப்​ப​துடன், நீண்ட நேரத்​துக்கு ஸ்​விங் செய்​ய​வும் முடியும். ஆனால் இந்​தப் போட்​டி​யில் அத்​தகைய சூழல் அமைய​வில்லை.

பந்​தின் தன்​மையைப் பாது​காக்க எச்​சிலைப் பயன்​படுத்​து​வதற்​கான தடையை மறு​பரிசீலனை செய்ய வேண்​டும் ஷுப்​மன் கில் கருத்து தெரி​வித்​துள்​ளார். விதி​முறைகளில் மாற்​றம் செய்​வது எனது முடிவுக்கு உட்​பட்​டது அல்ல. உல​கம் கடந்​து​வந்த சூழலைக் கருத்​தில் கொள்​ளும்​போது, எச்​சிலைப் பயன்​படுத்​து​வதற்​கான தடை நீக்​கப்​படுமா என்​பது தெரிய​வில்லை” என்​றார்.

‘நியூஸிலாந்துக்கு சவால் அளித்தோம்’

இந்​திய அணி​யின் கேப்​டன் ஷுப்​மன் கில் கூறும்​போது, “ஆடுகளத்​தில் பந்​து​வீச்​சாளர்​களுக்கு இன்​னும் கொஞ்​சம் சாதக​மான அம்​சங்​கள் இருந்​திருந்​தால் ஆட்​டத்​தைத் தொடர்ந்​திருக்​கலாம். எங்​களது வேகப்​பந்து வீச்​சாளர்​கள் மிகவும் சோர்​வடைந்​திருந்​தனர். இந்​தப் போட்​டி​யில் அவர்​கள் கிட்​டத்​தட்ட 50 ஓவர்​கள் பந்​து​வீசி​யிருந்​தனர். மேலும், அடுத்த போட்டி இன்​னும் 3 நாட்​களில் தொடங்க உள்​ளது. நாளை பயணமும் மேற்​கொள்ள வேண்​டியுள்​ளது.

எனவே, அனைத்து பந்​து​வீச்​சாளர்​களை​யும் புத்​துணர்ச்​சி​யுடன் வைத்​திருக்க விரும்​பினோம். கூடுதலாக 5 முதல் 10 ஓவர்​கள் பந்​து​வீசி​யிருந்​தா​லும் பெரிய அளவில் பலன் கிடைத்​திருக்​கும் என்று நான் கருத​வில்லை. இதன் காரண​மாகவே ஒரு மணி நேரம் மீதம் இருந்த போதிலும் ஆட்​டத்தை டிராவில் முடிக்க சம்​மதம் தெரி​வித்​தோம்.

இந்த ஆடுகளத்​தில் 10 விக்​கெட்​டுகளை​யும் வீழ்த்​து​வது கடினம் என்​பது எங்​களுக்​குத் தெரியும். இருப்​பினும், ஓரிரு வாய்ப்​பு​கள் கிடைத்​தன. வெளி​நாட்டு மண்​ணில் விளை​யாடியபோதிலும், அனைத்து துறைகளி​லும் நியூஸிலாந்து அணிக்கு நாங்​கள் சவால் அளித்​தோம். முதல் இன்​னிங்​ஸில் பந்​து​வீச்​சிலும் சிறப்​பாகச் செயல்​பட்​டோம். பேட்​டிங்​கிலும் அனைத்து வீரர்​களும் தங்​களது பங்​களிப்பை வழங்​கினர். 2 சதங்​கள் மட்​டுமே அடிக்​கப்​பட்​டாலும், ஒட்​டுமொத்​த​மாக சுமார் 700 ரன்​கள் குவித்​தோம்” என்​றார்.

வெலிங்டன் டெஸ்ட் போட்டியை டிரா செய்தது நியூஸிலாந்து: முடிவு கிடைக்காததால் இந்திய அணி ஏமாற்றம்
திருப்பரங்குன்றத்தில் 144 தடை: 7,000 போலீஸ் குவிப்பு, பதற்றம்

X