விளையாட்டு

ஐசிசி தரவரிசையில் மந்தனா முதலிடம்

செய்திப்பிரிவு

துபாய்: மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் பேட்​டர்​களுக்​கான தரவரிசை பட்​டியலை ஐசிசி வெளி​யிட்​டுள்​ளது. இதில் இந்திய அணி​யின் தொடக்க வீராங்​க​னை​யான ஸ்மிருதி மந்தனா 790 புள்​ளி​களு​டன் முதலிடத்தை பிடித்​துள்​ளார்.

சமீபத்​தில் முடிவடைந்த ஆஸ்​திரேலி​யா​வுக்கு எதி​ரான தொடரில் மந்​தனா 58 மற்​றும் 31 ரன்​கள் எடுத்​திருந்​தார். தென் ஆப்​பிரிக்​கா​வின் லாரா வால்​வார்ட் 782 புள்ளிகளுடன் 2-வது இடத்​துக்கு தள்​ளப்​பட்​டார். ஆஸ்திரேலி​யா​வின் பெத் மூனி 2 இடங்​கள் முன்​னேறி 749 புள்​ளி​களு​டன் 3-வது இடத்தை பிடித்​துள்​ளார்.

          

இந்​தி​யா​வுக்கு எதி​ரான தொடருடன் சர்​வ​தேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஆஸ்​திரேலி​யா​வின் அலிசா ஹீலி 2 இடங்​கள் முன்​னேறி 744 புள்​ளி​களு​டன் 4-வது இடத்​தில் உள்​ளார். அதேவேளை​யில் ஆஷ்லே கார்ட்னர் 724 புள்​ளி​களு​டன் 2 இடங்​களை இழந்து 5-வது இடத்தை பிடித்​துள்​ளார்.

இந்​திய அணி​யின் கேப்​ட​னான ஹர்​மன்​பிரீத் கவுர் 4 இடங்கள் முன்​னேறி 652 புள்​ளி​களு​டன் 9-வது இடத்தை எட்டி​யுள்​ளார். ஆஸ்​திரேலி​யா​வுக்கு எதி​ரான தொடரில் அவர், 2 அரை சதங்​கள் அடித்​திருந்​தார். நட்​சத்​திர வீராங்கனை​யான ஜெமிமா ரோட்​ரிக்​ஸ் 4 இடங்​களை இழந்து 11-வது இடத்​துக்கு தள்​ளப்​பட்​டுள்​ளார்​.

SCROLL FOR NEXT