துபாய்: மகளிர் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய கிரிக்கெட் அணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகள் தரவரிசையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நேற்று வெளியிட்டது.
இதில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, 790 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார். 2-வது இடத்தில் தென் ஆப்பிரிக்க வீராங்கனை லாரா வோல்வார்ட் 782 புள்ளிகளுடன் உள்ளார். 3-வது இடத்தில் ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனியும் (749 புள்ளிகள்), 4-வது இடத்தில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி கார்டனரும்(724 புள்ளிகள்), 5-வது இடத்தில் இங்கிலாந்தின் நாட் ஷிவர்-பிரன்ட்டும் (714 புள்ளிகள்) உள்ளனர்.
674 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் ஆஸ்திரேலிய வீராங்கனை போப் லிட்ச்பீல்ட் இருக்கிறார். இந்திய வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர், ஓர் இடம் முன்னேறி 7-வது இடத்தைப் பிடித்துள்ளார். அவர் 652 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக் 12-வது இடத்தில் இருக்கிறார்.