விளையாட்டு

இந்​திய மகளிர் ஹாக்கி அணி​யின் பயிற்​சி​யாள​ராக ஜோயர்ட் மரைன் நியமனம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்​திய மகளிர் ஹாக்கி அணி​யின் தலை​மைப் பயிற்​சி​யாள​ராக ஜோயர்ட் மரைன் நியமனம் செய்​யப்​பட்​டுள்​ளார்.

இதுதொர்​பான அறி​விப்பை ஹாக்கி இந்​தியா அமைப்பு நேற்று வெளி​யிட்​டுள்​ளது. நெதர்​லாந்​தைச் சேர்ந்த ஜோயர்ட் மரைன் உடனடி​யாக இந்​திய மகளிர் அணி​யினருடன் இணைந்து கொள்​வார் என்று தெரிய​வந்​துள்​ளது. ஜோயர்ட் மரைனுக்கு உதவி​யாக, அனலிட்​டிக்​கல் பயிற்​சி​யாள​ராக மத்​தி​யாஸ் விலா இருப்​பார். இவர் அர்​ஜெண்​டி​னாவைச் சேர்ந்​தவர்.

இதுகுறித்து ஹாக்கி இந்​தியா அமைப்​பின் தலை​வர் திலீப் டிர்க்கி கூறும்​போது, “இந்​திய மகளிர் ஹாக்கி அணி​யின் தலை​மைப் பயிற்​சி​யாள​ராக ஜோயர்ட் மரைனை வரவேற்​கிறோம். அவரின் தலை​மை​யில் இந்​திய மகளிர் அணி​யினரின் பயிற்​சி​யும், விளை​யாட்​டும் மேம்​படும் என நம்​பு​கிறோம்” என்​றார்.

ஜோயர்ட் மரைன் கூறும்​போது, “நான்​கரை ஆண்​டு​களுக்​குப் பிறகு மீண்​டும் இந்​தி​யா​வுக்​குத் திரும்​பி​யிருப்​பது மகிழ்ச்சி அளிக்​கிறது. புதிய ஆற்​றலுட​னும் தெளி​வான பார்​வை​யுட​னும் நான் திரும்பி வந்​துள்​ளேன். அணி​யின் வளர்ச்​சிக்கு ஆதர​வளிக்​க​வும், உலக அரங்​கில் வீரர்​கள் தங்​கள் முழுத் திறனை​யும் வெளிப்​படுத்த உதவ​வும் நான் முயல்​வேன்” என்​றார்.

SCROLL FOR NEXT