முகமது சிராஜ்

 
விளையாட்டு

முகமது சிராஜை சேர்க்காதது தவறான முடிவு கிடையாது: சொல்கிறார் சிதான்ஷு கோடக்

செய்திப்பிரிவு

வெலிங்டன்: நியூஸிலாந்து அணிக்கு எதிராக நேற்று வெலிங்​டனில் தொடங்​கிய முதல் டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டி​யில் இந்​திய அணி​யில் வேகப்​பந்து வீச்​சாளரான முகமது சிராஜ் சேர்க்​கப்​பட​வில்லை. அவருக்கு பதிலாக அன்​ஷுல் கம்​போஜ் சேர்க்​கப்​பட்​டிருந்​தார். இது பல்​வேறு விமர்​சனங்​களுக்கு வழிவகுத்​தது.

இந்​நிலை​யில் முதல் நாள் ஆட்​டத்​துக்கு பின்​னர் இந்​திய கிரிக்​கெட் அணி​யின் பேட்​டிங் பயிற்​சி​யாளரான சிதான்ஷு கோடக் கூறிய​தாவது: முகமது சிராஜை நீக்​கியது தவறான முடிவு என்று நான் நினைக்​க​வில்லை. இது முதல் நாள் ஆட்​டம்​தான். முதல் நாளை மட்​டும் கருத்​தில் கொண்டு அணி​யைத் தேர்வு செய்​ய​வில்லை. 2, 3, 4-வது நாள் ஆட்​டங்​களை​யும் கணக்​கில் கொண்டே அணி​யைத் தேர்வு செய்​தோம்.

நியூஸிலாந்து அணி​யின் டாப் ஆர்​டரில் 4 இடதுகை பேட்​ஸ்​மேன்​கள் இருப்​ப​தால் வாஷிங்​டன் சுந்​தருக்கு முன்​னுரிமை அளித்​தோம். இந்​தப் போட்​டியைப் பொறுத்​தவரை இதுவே சிறந்த பந்​து​வீச்​சுத் தாக்​குதல் கொண்ட அணி​யாகும். அன்​ஷுல் கம்​போஜின் பந்​து​வீச்சு வேகம் மணிக்கு 126 முதல் 130 கி.மீ. வரை இருப்​பது குறித்து கவலைப்​படத் தேவை​யில்லை.

வேகம் என்​பது 3-வது ஸ்​பெல்​லில்​தான் முக்​கியத்​து​வம் பெறுகிறது. அன்​ஷுல் கம்​போஜ் மணிக்கு 130, 128, சில பந்​துகளில் 126 கி.மீ. வேகத்​தில் வீசுகிறார். அது போது​மானது. பிரசித் கிருஷ்ணா தாக்​குதல் பந்​து​வீச்​சாளர் என்​பது எங்​களுக்​குத் தெரியும். அவர் சில ரன்​களை விட்​டுக்​கொடுப்​பார் என்​ப​தையும் அறிவோம். அவர் விக்​கெட்​டுகளை வீழ்த்​தும்​போது மகிழ்ச்​சி​யடைகிறோம். ரன்​களை விட்​டுக்​கொடுக்​கும்​போது அதிருப்தி அடைகிறோம். ஆனால், அவரை மதிப்​பிடுவதற்கு இது நியாய​மான அணுகுமுறை அல்ல.

வானிலை நன்​றாகவும், வெயில் அதி​க​மாகவும் இருந்​ததால் ஆடுகளத்​தில் இருந்த ஈரப்​ப​தம் வழக்​கத்​தைவிட விரைவாகக் காய்ந்​து​விட்​டது. நியூஸிலாந்து வீரர்​களும் சிறப்​பாக பேட்​டிங் செய்​தனர். அவர்​களுக்​குப் பாராட்​டுகள். சுழற்​பந்​து​வீச்​சுக்கு எதிராக அவர்​கள் தேவையற்ற ரிஸ்க் எடுக்​க​வில்லை. புதிய பந்​தில்​தான் பந்​து​வீச்​சாளர்​களுக்கு அதிக சாதக​மான சூழல் இருந்​தது. இவ்​வாறு சிதான்ஷு கோடக் கூறினார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT