இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்ததையடுத்து ஷுப்மன் கில் கேப்டன்சியில் 3 ஒருநாள் போட்டிகளை இழந்துள்ளார். அவரது ஒரே வெற்றி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மட்டுமே. அதுவும் இந்தியாவில் நடந்த போட்டித் தொடரில் என்பது குறிப்பிடத்தக்கது.
டி20-யில் அய்யர் கேப்டன்சியில் 0-4 என்று ஒயிட் வாஷ் வாங்கிய இந்திய அணி ஒருநாள் தொடரில் 1-2 என்று உதை வாங்கியது. ஏற்கெனவெ அயர்லாந்திடம் டி20 ஒயிட் வாஷ் ஒரு பக்கம்.
இந்நிலையில் இந்திய சிட்னி டிரா ஸ்பெஷலிஸ்ட் ஹனுமா விஹாரி, கில் கேப்டன்சியின் போதாமையை விமர்சித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 6வது பவுலர் தெரிவு செய்ய வாய்ப்பில்லாமல் 4 வேகப்பந்து வீச்சுடன் 5 பவுலர்களை மட்டுமே தெரிவு செய்திருந்தார் கில். இதனால் பும்ரா இல்லாத நிலையில் பிரின்ஸ் யாடவ், பிரார், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் பந்து வீச்சை இங்கிலாந்து பிரித்து மேய்ந்து விட்டனர் 387ரன்களைக் குவித்தனர். இந்திய அணி சேஸ் செய்த்து... செய்தது 387 வந்தபாடில்லை, 27 ரன்களில் தோல்வியடைந்து கம்பீர்-கில் சேர்க்கையில் இன்னொரு உதை என்ற கணக்காகிப் போனது.
இந்நிலையில் ஹனுமா விஹாரி கூறும்போது, “கடைசி ஒருநாள் போட்டியில் 5 பவுலர்களை மட்டுமே கொண்டு களமிறங்கியது அவ்வளவு புத்திசாலித்தனமாகத் தெரியவில்லை. அனைவரும் அடி வாங்கும் போது 6வது பவுலர் இல்லாமல் கில் பவுலிங் மாற்றத்தில் திணறியது அப்பட்டமாகத் தெரிந்தது.
மேலும் 6வது பவுலர் என்னும் போது இருக்கும் தெரிவுகளை எப்படிச் சாமர்த்தியாமக பயன்படுத்துவது என்பதையாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஆனால் கில் அதிலும் சோடை போனார். 5 பவுலர்கள் தான் எனும் போது கள வியூகம், பந்து வீச்சு மாற்றத்தில் கூர்மையாக இருக்க வேண்டும்.
கில் இந்த விஷயங்களில் இன்னும் முன்னேற்றமடைய வேண்டும். அவர் பேட்டிங் அற்புதம், ஆனால் கேப்டன்சி இன்னும் முன்னேற்றம் காண வேண்டும், ஏனெனில் அவரது இப்போதைய உத்திகளில் முடிவுகள் மோசாகப் போய்க்கொண்டிருக்கின்றன.
மேலும் ஏன் குல்தீப் யாதவ் அணியில் இல்லை. இது போன்ற ஒதுக்கல்களைத்தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. டி20-யில் இளம் வீரரை நம்புவது சரி, ஆனால் ஒருநாள் போட்டிகளுக்கு அனுபவ வீரர் வேண்டாமா? ஐபிஎல்க்குப் பிறகே இந்திய அணிக்கு நிறைய வீரர்கள் இருக்கிறார்கள், ஆனால் அதிலிருந்து மேட்ச் வின்னர்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
லார்ட்ஸ் ஒரு ஸ்லோ பிட்ச். இதில் 4 வேகப்பந்து வீச்சாளர் ஆனால் ரிஸ்ட் ஸ்பின்னர் குல்தீப் யாதவ் இல்லை என்பது அதிர்ச்சியானது. தொடருக்கான அணியில் தேர்வு செய்வது லெவனில் வாய்ப்பளிக்கவில்லை எனில் எப்படி அவரை உலகக்கோப்பைக்குத் தேர்வு செய்ய முடியும்? இப்படி மோசமாகத் தொடரை இழக்கும் போது இத்தகைய கேள்விகளை அனைவரும் எழுப்ப வேண்டும்.”
இவ்வாறு கடுமையாகக் கூறியுள்ளார் ஹனுமா விஹாரி.