ஸ்ரேயஸ் ஐயர்

 
விளையாட்டு

இந்திய டி20 அணியின் கேப்டனாக ஸ்ரேயஸ் ஐயர் நியமனம்

சூர்யகுமார் யாதவ் நீக்கம், வைபவ் சூர்யவன்ஷிக்கு இடம்

செய்திப்பிரிவு

மும்பை: இந்​திய கிரிக்​கெட் அணி இம்​மாத இறு​தி​யில் அயர்லாந்தில் சுற்​றுப் பயணம் செய்து அந்த அணிக்கு எதி​ராக 2 டி20 போட்​டிகளில் விளை​யாடு​கிறது. இந்த ஆட்​டங்​கள் ஜூன் 26 மற்​றும் 28-ம் தேதி​களில் பெல்ஃ​பாஸ்ட் நகரில் நடை​பெற உள்​ளது.

இதைத் தொடர்ந்து இங்​கிலாந்து செல்​லும் இந்​திய அணி அங்கு 5 டி20 ஆட்​டங்​கள், 3 ஒரு​நாள் போட்​டிகள் கொண்ட தொடரில் விளை​யாடு​கிறது. இந்​தத் தொடர் ஜூலை 1-ல் தொடங்​கு​கிறது. இந்த தொடர்​களுக்​கான இந்​திய அணி தேர்வு நேற்று தேர்​வுக்​குழு தலை​வர் அஜித் அகர்​கர் தலை​மை​யில் நடை​பெற்​றது.

கேப்​ட​னாக ஸ்ரேயஸ் ஐயர் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளார். 15 வயதாகும் வைபவ் சூர்​ய​வன்​ஷி​யும் சேர்க்​கப்​பட்​டுள்​ளார். இதன் வாயி​லாக இந்​திய கிரிக்​கெட் அணிக்கு தேர்​வான இளம் வயது வீரர் என்ற சாதனையை படைத்​துள்​ளார் சூர்​ய​வன்ஷி (15 வயது 71 நாட்​கள்). இந்த வகை​யில் இதற்கு முன்​னர் சச்​சின் டெண்​டுல்​கர் 16 வயது 205 நாட்​களில் இந்​திய டெஸ்ட் அணி​யில் அறி​முக​மாகி இருந்​தார்.

ஐபிஎல் தொடரில் 2024-ம் ஆண்டு சீசனில் கொல்​கத்தா அணி​யின் கேப்​ட​னாக அந்த அணிக்கு கோப்​பையை வென்று கொடுத்​திருந்​தார் ஸ்ரேயஸ் ஐயர். தொடர்ந்து அடுத்த சீசனில் பஞ்​சாப் அணி​யின் கேப்​ட​னாக அந்த அணியை இறு​திப் போட்டி வரை அழைத்​துச் சென்​றிருந்​தார். சமீபத்​தில் முடிவடைந்த ஐபிஎல் தொடரிலும் ஸ்ரேயஸ் ஐயர் சிறந்த திறனை வெளிப்​படுத்​தி​யிருந்​தார்.

இதன் அடிப்​படை​யிலேயே அவரை, தேர்​வுக்​குழு​வினர் கேப்​ட​னாக நியமித்​துள்​ளனர். அதேவேளை​யில் சூர்​யகு​மார் யாதவ் கேப்​டன் பொறுப்​பில் இருந்​தும் அணி​யில் இருந்​தும் நீக்​கப்​பட்​டுள்​ளார். டி 20 உலகக் கோப்​பையை சூர்​யகு​மார் யாதவ் தலை​மை​யில் இந்​திய அணி வென்​றிருந்​தது. எனினும் கடந்த 18 மாதங்​களாக அவர், பேட்​டிங்​கில் பார்​மின்றி தவித்து வந்​த​தால் தற்​போது அணி​யில் தனக்​கான இடத்தை பறி​கொடுத்​துள்​ளார். மேலும் ஆல்​ர​வுண்​ட​ரான ஹர்​திக் பாண்​டி​யா​வும் சேர்க்​கப்​பட​வில்​லை.

15 வயதாகும் சூர்​ய​வன்ஷி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஒரு சதம், 5 அரை சதங்​களு​டன் 776 ரன்​கள் குவித்​திருந்​தார். அவரது ஸ்டிரைக் ரேட் 237.30 ஆக இருந்​தது. துணை கேப்​ட​னாக திலக் வர்மா நியமிக்​கப்​பட்​டுள்​ளார். ஐபிஎல் தொடரில் சிறப்​பாக செயல்​பட்ட வேகப்​பந்து வீச்​சாளர் பிரின்ஸ் யாதவுக்​கும் வாய்ப்பு கொடுக்​கப்​பட்​டுள்​ளது. காயத்​தில் இருந்து மீண்​டுள்ள ஆல்​ர​வுண்​ட​ரான ஹர்​ஷித் ராணா​வும் அணிக்கு திரும்பி உள்​ளார்.

வரும் செப்​டம்​பர்​-அக்​டோபர் மாதங்​களில் ஜப்​பானில் நடை​பெற உள்ள ஆசிய விளை​யாட்டு போட்​டி​யில் கலந்​து​கொள்​ளும் இந்​திய அணி​யும் அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதில் முன்​னணி வேகப்​பந்து வீச்​சாள​ரான ஜஸ்​பிரீத் பும்ரா சேர்க்​கப்​பட்​டுள்​ளார். அதேவேளை​யில் அவருக்கு அயர்​லாந்​து, இங்​கிலாந்து தொடர்​களில் ஓய்வு வழங்​கப்​பட்​டுள்​ளது.

அயர்​லாந்​து, இங்​கிலாந்து டி20 தொடருக்​கான இந்​திய அணி:

ஸ்ரேயஸ் ஐயர் (கேப்​டன்), அபிஷேக் சர்​மா, சஞ்சு சாம்​சன், வைபவ் சூர்​ய​வன்​ஷி, இஷான் கிஷன், ஷிவம் துபே, திலக் வர்​மா, நிதிஷ் குமார் ரெட்​டி, அக்​சர் படேல், வாஷிங்​டன் சுந்​தர், வருண் சக்​ர​வர்த்​தி, ரவி பிஷ்னோய், முகமது சிராஜ், ஹர்​ஷித் ராணா, அர்​ஷ்தீப் சிங், பிரின்ஸ் யாதவ்.

SCROLL FOR NEXT