லீட்ஸ்: ஐசிசி டி 20 மகளிர் உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் நேற்று முன்தினம் 95 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை தோற்கடித்தது.
இந்த போட்டியின் போது இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளரான ஸ்ரேயங்கா பாட்டீல் கணுக்காலில் காயம் அடைந்தார். இதையடுத்து அவர், தொடரில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு பதிலாக லெக் ஸ்பின்னரான பிரேமா ராவத் இந்திய மகளிர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.