விளையாட்டு

உலக பாரா வில்வித்தை ஸ்டேஜ் 3: இறுதி போட்டிக்கு முன்னேறினார் ஷீத்தல்

செய்திப்பிரிவு

அகமதாபாத்: உலக பாரா வில்வித்தை ஸ்டேஜ் 3 போட்டி அகமதாபாத்​தில் நடை​பெற்று வரு​கிறது. இதில் மகளிருக்​கான காம்​பவுண்ட் தனி​நபர் பிரிவு அரை இறு​தி​யில் நடப்பு சாம்​பியனும், உலகின் முதல் வீராங்​க​னை​யு​மான இந்​தி​யா​வின் ஷீத்தல் தேவி 145-143 என்ற புள்​ளி​கள் கணக்​கில் சகநாட்​டைச் சேர்ந்த சரி​தாவை வீழ்த்தி இறு​திப் போட்​டிக்கு முன்​னேறி​னார்.

இறு​திப் போட்​டி​யில் ஷீத்​தல் தேவி, கஜகஸ்​தானின் ஐதா செய்டனுடன் மோதுகிறார். அரை இறு​தி​யில் தோல்வி அடைந்த சரி​தா, வெண்​கலப் பதக்​கத்​துக்​கான ஆட்​டத்​தில் சீனா​வின் வாங்ஹூட்​டிங்கை சந்​திக்​கிறார்

SCROLL FOR NEXT