இஷான் கிஷன், ஷமி

 
விளையாட்டு

ஷமியிடம் இன்னும் வேட்கை இருக்கிறது: சொல்கிறார் இஷான் கிஷன்

செய்திப்பிரிவு

சென்னை: இந்​திய அணிக்கு மீண்​டும் திரும்​புவதற்​கான வேட்கை முகமது ஷமி​யிடம் இன்​னும் இருக்​கிறது என கிழக்கு மண்டல அணி​யின் கேப்​டன் இஷான் கிஷன் கூறி​னார்.

துலீப் டிராபி இறு​திப் போட்​டி​யில் இன்று கிழக்கு மண்டல - தென் மண்​டலம் அணி​கள் இன்று சென்​னை​யில் மோதுகின்​றன. கிழக்கு மண்​டலம் அணி 13 வருடங்​களுக்கு பிறகு தற்​போது​தான் இறு​திப் போட்​டி​யில் விளை​யாடு​கிறது. அந்த அணி இறு​திப் போட்​டி​யில் நுழைந்​த​தில் வேகப்​பந்து வீச்​சாளர் முகமது ஷமி முக்​கிய பங்கு வகித்​திருந்​தார்.

மத்​திய மண்​டலம் அணிக்கு எதி​ரான அரை இறுதி ஆட்​டத்​தில் முகமது ஷமி 5 விக்​கெட்​களை வீழ்த்​தி​யிருந்​தார். இறு​திப் போட்​டி​யிலும் அவர், எதிரணி​யின் பேட்​ஸ்​மேன்​களுக்கு அழுத்​தம் கொடுக்​கக்​கூடும் என கருதப்​படு​கிறது. இந்​நிலை​யில் கிழக்கு மண்டல அணி​யின் கேப்​டன் இஷான் கிஷன் கூறிய​தாவது:

முகமது ஷமி, விளை​யாட்​டின் ஜாம்​ப​வா​னாக விளங்​கு​கிறார். பெங்​கால் அணிக்​காக விளை​யாடத் தொடங்​கிய​தில் இருந்தே அவர், மிகச் சிறப்​பாகச் செயல்​பட்டு வரு​கிறார். தனது முழு ஆற்​றலை​யும் வெளிப்​படுத்​தித் தொடர்ந்து விக்​கெட்​டு​களை வீழ்த்தி வரு​கிறார். இந்​திய கிரிக்​கெட் அணிக்​காக​வும் அவர், மிகச் சிறப்​பான பங்​களிப்பை வழங்​கி​யுள்​ளார்.

வயது என்​பது வெறும் எண் மட்​டுமே என்று நான் கருதுகிறேன். மீண்​டும் இந்​திய அணிக்கு திரும்ப வேண்​டும் என்ற வேட்​கையை முகமது ஷமி​யிடம் என்​னால் பார்க்க முடிகிறது. அவர், அணி​யில் இருப்​பது எங்​களுக்​குக் கூடு​தல் நம்​பிக்​கையை அளிக்​கிறது.

ஒரு கேப்​ட​னாக முகமது ஷமி​யின் முயற்​சிகளைப் பார்க்​கும்​போது எனக்கு மிக​வும் மகிழ்ச்​சி​யாக இருந்​தது. ஏனெனில், ஷமி என்​னிடம் வந்து விக்​கெட்​டு​களை வீழ்த்​தத் கூடு​தல் ஓவர்​களைக் கேட்​பார். இது கேப்​டன்​களுக்கு எப்​போதுமே ஒரு​வித நம்​பிக்​கை​யைக் கொடுக்​கும். அணி​யில் விக்​கெட்​டு​களை வீழ்த்​தத் துடிக்​கும் பந்​து​வீச்​சாளர்​கள் இருக்​கும்​போது அது உற்​சாகமளிக்​கும்.

இந்த சீசனில் ஷமி முற்​றி​லும் மாறு​பட்​ட​வ​ராக தெரி​கிறார். கடந்த காலங்​களில் நான் அவரைப் பார்த்த விதத்தை விட, ஆட்​டத்​தின் மீதான அவரது அணுகு​முறை, தீவிரம், ஆற்​றல் ஆகியவை மிக​வும் வித்​தி​யாச​மாக உள்​ளன.

இந்​திய அணிக்​காகத் தொடர்ந்து விளை​யா​டா​மல் இருக்​கும்​போது, உள்​ளூர் போட்​டிகளுக்​கும் அதே போன்ற ஊக்​கத்தை வைத்​திருப்​பது கடினம். அவரிடம் தற்​போதும் அந்த வேட்​கை​யும் ஊக்​க​மும் உள்​ளது. அவர், மீண்​டும் இந்​திய அணி​யின் ஒரு பகு​தி​யாக மாற விரும்​பு​கிறார்​. இவ்​வாறு இஷான்​ கிஷன்​ கூறி​னார்.

SCROLL FOR NEXT