விளையாட்டு

ஐசிசி பேட்​டிங் தரவரிசையில் ஷபாலி வர்மா முன்​னேற்​றம்

செய்திப்பிரிவு

துபாய்: மகளிர் டி20 கிரிக்​கெட் பேட்​டிங் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளி​யிட்​டுள்​ளது. இதில் இந்​திய அணியின் தொடக்க வீராங்​க​னை​யான ஷபாலி வர்மா 2 இடங்​கள் முன்​னேறி 6-வது இடத்தை பிடித்​துள்​ளார். தென் ஆப்​பிரிக்கா​வுக்கு எதி​ராக தற்​போது நடை​பெற்று வரும் இருதரப்பு டி 20 தொடரின் 2-வது ஆட்​டத்​தில் ஷபாலி வர்மா 38 பந்​துகளில் 57 ரன்​கள் எடுத்​திருந்​தார்.

இதன் மூலம் அவர், ஐசிசி தரவரிசை​யில் முன்​னேற்​றம் கண்​டுள்​ளார். அதேவேளை​யில் மற்​றொரு தொடக்க வீராங்​க​னை​யான ஸ்மிருதி மந்​தனா ஓர் இடத்தை இழந்து 4-வது இடத்​துக்கு தள்​ளப்​பட்​டுள்​ளது. தென் ஆப்​பிரிக்கா​வுக்கு எதி​ரான தொடரில் அவர், 2 ஆட்​டங்​களில் முறையே 13, 12 ரன்​களே எடுத்​திருந்​தார்.

மேற்கு இந்​தி​யத் தீவு​களின் ஹெய்லி மேத்​யூஸ் 3-வது இடத்துக்கு முன்​னேறி உள்​ளார். இந்​திய அணி​யின் கேப்டனான ஹர்​மன்​பிரீத் கவுர் 2 இடங்​கள் முன்​னேறி 11-வது இடத்தை பிடித்​துள்​ளார். மகளிர் உலகக் கோப்பை தொடரில் ஜொலித்த இந்​தி​யா​வின் ஜெமிமா ரோட்​ரிக்ஸ் 4 இடங்​களை இழந்து 14-வது இடத்​துக்கு தள்​ளப்​பட்​டுள்​ளார். தள்​ளப்​பட்​டுள்​ளார். அருந்​ததி ரெட்டி 3 இடங்​களை இழந்​து 12-வது இடத்​தை பிடித்​துள்​ளார்.

SCROLL FOR NEXT