விளையாட்டு

செனுரன் முத்​து​சாமி சதம்: குவாஹாட்டி டெஸ்ட்டில் தென் ஆப்பிரிக்கா ஆதிக்கம்!

வேட்டையன்

குவாஹாட்டி: இந்​தி​யா​வுக்கு எதி​ரான 2-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டி​யில் தென் ஆப்​பிரிக்க வீரர் செனுரன் முத்துசாமி சதம் பதிவு செய்து அசத்தினார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது முதல் சதமாக அமைந்துள்ளது.

குவாஹாட்​டி​யில் உள்ள பர்​ச​பாரா மைதானத்​தில் நேற்று தொடங்​கிய இந்த டெஸ்ட் போட்​டி​யில் டாஸ் வென்ற தென் ஆப்​பிரிக்க அணி​யின் கேப்​டன் தெம்பா பவுமா பேட்​டிங்கை தேர்வு செய்​தார். அந்த அணி​யில் ஒரே ஒரு மாற்​றம் இருந்​தது. வேகப்​பந்து வீச்சு ஆல்​ர​வுண்​ட​ரான கார்​பின் போஷ் நீக்​கப்​பட்டு சுழற்​பந்து வீச்சு ஆல்​ர​வுண்​ட​ரான செனுரன் முத்​து​சாமி சேர்க்​கப்​பட்​டார். அவர்தான் இப்போது சதம் விளாசி அசத்தியுள்ளார்.

காயம் காரண​மாக ஷுப்​மன் கில் வில​கிய​தால் இந்​திய அணி ரிஷப் பந்த் தலை​மை​யில் விளையாடி வருகிறது. இந்​திய அணி​யில் 2 மாற்​றங்​கள் இருந்​தன. ஷுப்​மன் கில், அக்​சர் படேலுக்கு பதிலாக சாய் சுதர்​சன், நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் சேர்க்​கப்​பட்​டனர்.

முதல் நாள் ஆட்டத்தில் தென் ஆப்​பிரிக்க அணி 81.5 ஓவர்​களில் 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 247 ரன்​கள் எடுத்த நிலை​யில் போதிய வெளிச்​சம் இல்​லாத காரணத்​தால் ஆட்​டம் முடித்​துக் கொள்​ளப்​பட்​டது. செனுரன் முத்​து​சாமி 45 பந்​துகளில், 4 பவுண்​டரி​களு​டன் 25 ரன்​களும், கைல் வெர்​ரெய்ன் ஒரு ரன்​னும் சேர்த்து களத்​தில் இருந்​தனர்.

இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று (நவ.23) தொடங்கியது. முதல் செஷனை விக்கெட் இழப்பின்றி வெற்றிகரமாக அணுகினர் செனுரன் முத்​து​சாமியும், கைல் வெர்​ரெய்னும். குறிப்பாக சுழற்பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பாக பேட் செய்தனர். அவர்களது தடுப்பாட்டம் அமர்க்களமாக இருந்தது. அவர்கள் இருவரும் இணைந்து 88 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். கைல் வெர்​ரெய்ன் 122 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து வந்த மார்கோ யான்சன் அதிரடியாக ஆடி ரன் சேர்த்தார். மறுமுனையில் 192 பந்துகளில் சதம் விளாசினார் முத்துசாமி. இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது முதல் சதமாகும். இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் ஆர்டரில் 7-வது பேட்ஸ்மேனாக அவர் களமிறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. யான்சனும் அரை சதம் கடந்தார். இரண்டாம் நாள் மதிய உணவு நேர இடைவேளையின் போது 7 விக்கெட் இழப்புக்கு 428 ரன்கள் எடுத்துள்ளது தென் ஆப்பிரிக்கா. இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் இரண்டு செஷன் நிறைவடைந்துள்ள நிலையில் ஒரு விக்கெட்டை மட்டுமே அந்த அணி இழந்துள்ளது.

SCROLL FOR NEXT