சென்னை: ஐபிஎல் தொடரில் வரும் 26-ம் தேதி குஜராத் டைட்டன்ஸ் - சிஎஸ்கே அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதும் வகையில் அட்டவணை வெளியிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் இதில் தற்போது பிசிசிஐ மாற்றம் செய்துள்ளது.
இதன்படி இந்த ஆட்டம் அதே நாளில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 26-ம் தேதி அகமதாபாத்தில் மாநகராட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதை கருத்தில் கொண்டு இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதும் போட்டி வரும் மே 21-ம் தேதி அகமதாபாத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும்.