சர்பிராஸ் கான்
புதுடெல்லி: இலங்கையுடனான கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் காயம் அடைந்துள்ள சாய் சுதர்சனுக்குப் பதிலாக இந்திய அணியினருடன் சர்பிராஸ் கான் இணையவுள்ளார்.
இலங்கைக்கான தொடரில் விளையாடும் இந்திய அணியில் சாய் சுதர்சன் இடம்பெற்றிருந்தார். காயம் காரணமாக அவர் தொடரிலிருந்து விலகியுள்ளதால் தற்போது சர்பிராஸ் கான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தெரிவித்துள்ளது.
அவர் விரைவில் இலங்கை சென்று இந்திய அணியினருடன் இணைந்து கொள்வார் என்று பிசிசிஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.