

சென்னை: தமிழ்நாடு ஹாக்கி லீக் போட்டியின் லீக் ஆட்டத்தில் சிறப்பு விளையாட்டு விடுதி (ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் ஆஃப் எக்சலன்ஸ்) அணி வெற்றி பெற்றது. இப்போட்டிகள் சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகின்றன.
நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சிறப்பு விளையாட்டு விடுதி அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜிஎஸ்டி அன்ட் சென்டிரல் எக்சைஸ் அணியை வீழ்த்தியது. விளையாட்டு விடுதி அணி சார்பில் எஸ். விஷால், எஸ். கிருஷ்ணன் ஆகியோர் தலா ஒரு கோலடித்தனர். ஜிஎஸ்டி அன்ட் எக்சைஸ் அணி சார்பில் கே.விக்னேஷ் ஒரு கோலடித்தார்.
இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஏஜிஓஆர்சி அணியும், ஃபுட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா அணியும் மோதுகின்றன.மாலை 4 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும், தியான் வீரன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.