விளையாட்டு

ஐபிஎல் தொடரில் விலகுகிறார் சாம் கரண்

செய்திப்பிரிவு

ஜெய்ப்பூர்: இங்​கிலாந்து அணி​யின் நட்​சத்​திர ஆல்-ரவுண்ட​ரான சாம் கரண், இடுப்​புப் பகு​தி​யில் ஏற்​பட்ட காயம் காரண​மாக வரவிருக்​கும் ஐபிஎல் தொடரிலிருந்து வில​கக்​கூடும் என தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

சமீபத்​தில் நடை​பெற்ற டி20 உலகக்​கோப்பை அரையிறுதிப் போட்​டி​யில் இந்​தி​யா​விடம் தோல்வியடைந்த இங்​கிலாந்து அணி​யில் சாம் கரண் இடம் பெற்​றிருந்​தார். கடந்த சீசனில் ஐபிஎல் தொடரில் சாம் கரண் சிஎஸ்கே அணிக்​காக விளை​யாடி இருந்​தார்.

          

இதைத் தொடர்ந்து டிரேடிங் முறை​யில் 2026-ம் ஆண்டு சீசனுக்​காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்​கி​யிருந்​தது. தற்​போது அவர், காயத்​த​தால் அவதிப்​பட்டு வரு​வ​தால் ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி அவருக்​குப் பதிலாக மாற்று வீரரைத் தேடும் பணி​யில் தீவிர​மாக ஈடு​பட்​டுள்​ளது. 2026-ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி தனது முதல் ஆட்​டத்​தில் வரும் 30-ம் தேதி 5 முறை சாம்பியனான சிஎஸ்​கேவுடன் மோதுகிறது. இந்த ஆட்​டம் குவாஹாட்​டி​யில்​ நடை​பெறுகிறது.

SCROLL FOR NEXT