விளையாட்டு

சேலம் அணி ஆறுதல் வெற்றி: TNPL 2026

செய்திப்பிரிவு

சென்னை: டிஎன்​பிஎல் தொடரில் சென்னை சேப்​பாக்​கம் எம்.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் நேற்று நடை​பெற்ற லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்​டன்ஸ் - ஐட்​ரீம் திருப்​பூர் தமிழன்ஸ் அணி​கள் மோதின.

இரு அணி​களுக்​குமே இது கடைசி ஆட்​டம். சேலம் அணி அடுத்த சுற்​றுக்கு முன்​னேறும் வாய்ப்பை ஏற்​கெனவே இழந்து இருந்​தது. அதே வேளை​யில் திருப்​பூர் தமிழன்ஸ் அணி இந்த ஆட்​டத்​தில் வெற்றி பெற்​றால் பிளே ஆஃப் சுற்​றுக்கு தகுதி பெற முடி​யும் என்ற சூழ்​நிலை இருந்​தது.

முதலில் பேட் செய்த சேலம் அணி 20 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 169 ரன்​கள் எடுத்​தது. அதி​கபட்​ச​மாக கார்த்​திக் மணி​கண்​டன் 40 பந்​துகளில், 2 சிக்​ஸர்கள், 5 பவுண்​டரி​களு​டன் 57 ரன்​கள் விளாசி​னார். கேப்​டன் அபிஷேக் 29, பூபதி குமார் 27, ஈஸ்​வர் 26 ரன்​கள் சேர்த்​தனர். திருப்​பூர் தமிழன்ஸ் அணி தரப்​பில் மதி​வாணன் 3 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார்.

170 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த திருப்​பூர் தமிழன்ஸ் அணி​யால் 20 ஓவர்​களில் 9 விக்​கெட்​கள் இழப்​புக்கு 124 ரன்​கள் மட்​டுமே எடுக்க முடிந்​தது. அதி​கபட்​ச​மாக கேப்​டன் துஷார் ரஹேஜா 43 பந்​துகளில், 5 சிக்​ஸர்​கள், 6 பவுண்​டரி​களு​டன் 75 ரன்​கள் விளாசி​னார். அமித் சாத்விக் 16, முகமது அலி 10 ரன்​கள் சேர்த்​தனர். 45 ரன்​கள் வித்​தி​யாசத்​தில்​ வெற்​றி பெற்​ற சேலம்​ அணி ஆறு​தல்​ வெற்​றி​யுடன்​ வெளியேறியது.

SCROLL FOR NEXT