லண்டன்: பிரிட்டனில் நடைபெற்று வரும் கவுண்டி கிரிக்கெட் போட்டியில் குளுசெஸ்டர்ஷையர் அணிக்காக விளையாடிய தமிழக வீரர் பி.சாய் கிஷோர் 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.
பிரிட்டனின் பிரிஸ்டோல் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற கவுண்டி கிரிக்கெட் போட்டியில் குளுசெஸ்டர்ஷையர், டெர்பிஷையர் அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் குளுசெஸ்டர்ஷையர் அணி 213 ரன்கள் வித்தியாசத்தில் டெர்பிஷையர் அணியை வீழ்த்தியது.
குளுசெஸ்டர்ஷையர் அணிக்காக விளையாடிய சாய் கிஷோர் 18 ஓவர்கள் பந்துவீசி 12 மெய்டன்களுடன் 5 விக்கெட்களைச் சாய்த்து அசத்தல் சாதனை புரிந்தார். இவரது சிறப்பான பந்துவீச்சால் குளுசெஸ்டர்ஷையர் அணி அபார வெற்றியைப் பெற்றுள்ளது.