ஸ்​ரேயஸ் ஐயர்

 
விளையாட்டு

ஸ்​ரேயஸ் ஐயருக்கு ரூ.24 லட்சம் அபராதம்

செய்திப்பிரிவு

சென்னை: பந்​து​வீச கூடு​தல் நேரம் எடுத்​துக் கொண்​டதற்​காக பஞ்​சாப் கிங்ஸ் அணி​யின் கேப்​டன் ஸ்ரேயஸ் ஐயருக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்​கப்​பட்​டுள்​ளது.

நேற்று முன்​தினம் சென்னை சேப்​பாக்​கம் மைதானத்​தில் சென்னை சூப்​பர்​ கிங்​ஸ் ​(சிஎஸ்​கே), பஞ்​சாப் அணி​கள் மோதின. முதலில் சிஎஸ்கே அணி பேட்​டிங் செய்​தது. அப்​போது 20 ஓவர்​களை வீசி முடிக்க பஞ்​சாப் அணி கூடு​தல் நேரம் எடுத்​துக் கொண்​டது.

          

ஐபிஎல் விதி​முறை​களின்​படி, ஓர் அணி தங்​களது 20 ஓவர்​களை குறிப்​பிட்ட நேரத்​துக்​குள் வீசி முடிக்க வேண்​டும். ஆனால், சிஎஸ்கே அணிக்கு எதி​ரான இந்த போட்​டி​யில் பந்​து​வீச பஞ்​சாப் அணி 2 மணி நேரத்​துக்​கும் மேல் எடுத்​துக்​கொண்​டது. ஐபிஎல் நடத்தை விதி​முறை 2.22-ன் கீழ், ‘ஸ்லோ ஓவர் ரேட்’ எனப்​படும் குறிப்​பிட்ட நேரத்​துக்​குள் பந்​து​வீசி முடிக்​காத குற்​றத்​துக்​காக கேப்​டன் ஷ்ரேயஸ் ஐயருக்கு பிசிசிஐ தரப்​பில் இருந்து ரூ.24 லட்​சம் அபராதம் விதிக்​கப்​பட்​டுள்​ளது.

அணி​யின் மற்ற வீரர்​களுக்கு (பிளே​யிங் லெவன் மற்​றும் இம்​பேக்ட் பிளேயர் உட்​பட) தலா ரூ.6 லட்​சம் அல்​லது அவர்​களின் போட்டி ஊதி​யத்​தின் 25 சதவீதம் அபராத​மாக விதிக்​கப்​பட்​டுள்​ளது. இதில் எது குறைவோ அதனை அபராத​மாக செலுத்த வேண்​டும். இந்த சீசனில் இது பஞ்​சாப் அணி​யின் இரண்​டாவது மெதுவான பந்து வீச்சு என்​ப​தால் அதிக அபராதம் விதிக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT