விளையாட்டு

ரோஹித், பாண்டியா ஒருநாள் தொடருக்கு தயார்

செய்திப்பிரிவு

முலான்பூர்: ஆப்கானிஸ்தானுக்கு எ​தி​ரான ஒரு​நாள் தொடரில் விளை​யாடு​வதற்கு சீனியர் நட்​சத்​திர பேட்​ஸ்​மே​னான ரோஹித் சர்​மா, ஆல்​ர​வுண்​டர் ஹர்​திக் பாண்டியா ஆகியோர் முழு உடல் தகு​தியை பெற்​றுள்​ளனர்.

தொடை பகு​தி​யில் ஏற்​பட்ட காயம் காரண​மாக ரோஹித் சர்மாவும், முதுகுப் பகு​தி​யில் ஏற்​பட்ட காயம் காரண​மாக ஹர்​திக் பாண்டியாவும் ஐபிஎல் தொடரின் சில ஆட்​டங்​களில் விளையாடவில்​லை.

இந்த காயத்​துக்​காக இவர்​கள் இரு​வரும் பெங்​களூரு​வில் உள்ள பிசிசிஐ திறன்​மிகு மையத்​தில் கடந்த 2-ம் தேதி முதல் சிகிச்சையும் பயிற்​சி​யும் பெற்று வந்​தனர். இவர்​களது உடல்​நிலையை அங்குள்ள மருத்​து​வக்​குழு கண்​காணித்து வந்​தது.

பல்​வேறு கட்ட பரிசோதனை​களுக்கு பிறகு ரோஹித் சர்​மா​வும், ஹர்​திக் பாண்டியாவும் முழு உடற்​தகு​தியை அடைந்​துள்​ள​தாக பிசிசிஐ திறன்​மிகு மையம் அறி​வித்​துள்​ளது. இதையடுத்து இவர்கள் இரு​வரும் வரும் 13-ம் தேதி ஆப்​கானிஸ்​தான் அணிக்கு எதி​ராக தொடங்​கும் 3 ஒரு​நாள் போட்​டிகள் கொண்ட தொடரில் களமிறங்​க உள்​ளனர்​.

SCROLL FOR NEXT