ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஜேஏஏசி அமைப்புக்கான தடையை எதிர்த்து போராட்டம்: பாகிஸ்தான் ராணுவம் சுட்டதில் 30 பேர் உயிரிழப்பு

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஜேஏஏசி அமைப்புக்கான தடையை எதிர்த்து போராட்டம்: பாகிஸ்தான் ராணுவம் சுட்டதில் 30 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகு​தி​யில் போராட்​டம் தீவிரம் அடைந்​துள்​ளது. போராட்​டக்​காரர்​களுக்​கும், பாகிஸ்தான் ராணுவப் படை​யினருக்​கும் இடையே ஏற்​பட்ட மோதலில் 30 பேர் உயி​ரிழந்​தனர்.

பாகிஸ்​தான் ஆக்​கிரமிப்பு காஷ்மீர் பகு​தி​யில், பொது சட்​டம் - ஒழுங்கு மற்​றும் பாது​காப்பு விவ​காரங்​களை காரணம் காட்​டி, கடந்த வெள்​ளிக்​கிழமையன்று ஜேஏஏசி அமைப்​புக்கு பாகிஸ்தான் உயர் அதி​காரி​கள் தடை விதித்​தனர்.

இந்த தடைக்கு எதி​ராக பாகிஸ்​தான் ஆக்​கிரமிப்பு காஷ்மீரின் பல்​வேறு பகு​தி​களில் போராட்​டங்​கள் வெடித்​தன. கடந்த வெள்ளிக்கிழமை இரவு பாது​காப்புப் படை​யினருட​னான மோதலின்​போது வணி​கர் ஒரு​வர் உயி​ரிழந்​தார். இதனையடுத்து ராவல​கோட் நகரில் பல இடங்​களில் மோதல்​கள் நடை​பெற்​றன.

இதுதொடர்​பாக ராவல​கோட்​டின் உயர்​மட்ட சிவில் அதி​காரி​யான கமிஷனர் சர்​தார் வாஹீத் கான் கூறுகை​யில், “கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஜேஏஏசி போராட்​டக்​காரர்​கள் மருத்துவ​மனை பிணவறைக்கு வெளியே கூடி​யிருந்​தனர். அந்த இடத்தில் பதற்​ற​மான சூழல் உரு​வான​தால், பாது​காப்​புப் படையினர் போராட்​டக்​காரர்​களைக் கலைக்க முயன்​றனர்.

அப்​போது அக்​குழு​வைச் சேர்ந்​தவர்​கள் தானி​யங்கி துப்பாக்கிகள், பெட்​ரோல் குண்​டு​கள் மற்​றும் பிற ஆயுதங்​களைப் பயன்​படுத்தி அவர்​கள் மீது தாக்​குதல் நடத்​தினர். இதற்கு பாதுகாப்புப் படை​யினர் பதிலடி கொடுக்​கும்​போது 6 போராட்டக்காரர்​கள் கொல்​லப்​பட்​டனர்’’ என்​றார்.

இந்​நிலை​யில், உள்​ளூர் மக்​களும், ஜேஏஏசி ஆதர​வாளர்​களும் அரசின் அதி​காரப்​பூர்வ தகவலை மறுத்​துள்​ளனர். பொதுமக்களின் உயி​ரிழப்பு எண்​ணிக்கை இதை​விட மிக அதி​கம் என்று அவர்​கள் தெரி​வித்​தனர். போராட்​டம் நேற்று தீவிரம் அடைந்​தது.

இதைத் தொடர்ந்து போராட்​டக்​காரர்​களுக்​கும், பாகிஸ்​தான் ராணுவத்​தினருக்​கும் இடையே கடும் மோதல் ஏற்​பட்​டது. இதில் ஏராள​மானோர் உயி​ரிழந்​தனர். நேற்று மாலை வரை 30 பேர் உயிரிழந்​தனர். மேலும் 200-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வரு​கின்​றனர்.

வரும் ஜூலை 27-ம் தேதி அந்த பிராந்​தி​யத்​தில் நடை​பெறவுள்ள சட்​டப்​பேர​வைத் தேர்தலுக்கான 45 இடங்​களில், அகதி​களுக்​காக 12 இடங்​கள் ஒதுக்கப்​பட்​டதை எதிர்த்து ஜேஏஏசி அமைப்பு வேலைநிறுத்​தப் போராட்​டத்​துக்கு அழைப்பு விடுத்​திருந்​தது. இந்​தச் சூழலில் இத்தகைய மோதல்​கள் ஏற்​பட்​டுள்​ளன.

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஜேஏஏசி அமைப்புக்கான தடையை எதிர்த்து போராட்டம்: பாகிஸ்தான் ராணுவம் சுட்டதில் 30 பேர் உயிரிழப்பு
அமெரிக்க ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய ஈரான்: பதிலடி கொடுக்கப்போவதாக ட்ரம்ப் எச்சரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in