கோப்புப்படம்

 
விளையாட்டு

அரை இறுதியில் ஆர்எம்கே கல்லூரி

செய்திப்பிரிவு

சென்னை: சென்​னையை அடுத்த கவரப்​பேட்​டை​யில் உள்ள ஆர்எம்கே பொறி​யியல் கல்​லூரி​யில் மண்டல அளவி​லான பொறியியல் கல்​லூரி​களுக்கு இடையி​லான மஞ்​சுளா முனிரத்​தினம் நினைவு கோப்​பைக்​கான கிரிக்கெட் தொடர் நடை​பெற்று வரு​கிறது.

இதில் நேற்று நடை​பெற்ற கால் இறுதி ஆட்​டம் ஒன்​றில் ஆர்​எம்கே - வேலம்​மாள் அணி​கள் மோதின. முதலில் பேட் செய்த வேலம்​மாள் கல்​லூரி அணி 19.5 ஓவர்​களில் 117 ரன்களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக மிதுன் 48, ரோஹித் 44 ரன்​கள் சேர்த்​தனர். ஆர்​எம்கே அணி தரப்​பில் யோக பாரதி 2 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார்.

          

118 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த ஆர்​எம்கே அணி 18 ஓவர்​களில் 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 123 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது. அதி​கபட்​ச​மாக சுந்​தரேசன் 60 ரன்​கள் எடுத்​தார். 3 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற ஆர்​எம்கே அணி அரை இறு​திக்கு முன்​னேறியது.

மற்ற கால் இறுதி ஆட்​டங்​களில் லலோயா கல்​லூரி அணி 8 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் சவீதா கல்​லூரியை​யும், ராஜலட்​சுமி கல்​லூரி 12 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் சத்​ய​பாமா பல்​கலைக்​கழக அணி​யை​யும், எஸ்எஸ்​என் கல்லூரி அணி 82 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் சாய்​ராம் கல்லூரியை​யும் வீழ்த்தி அரை இறு​திக்கு முன்​னேறின. இன்று நடை​பெறும் அரை இறுதி ஆட்​டங்​களில் ஆர்​எம்கே - ராஜலட்​சுமி அணி​களும் லயோலா - எஸ்​எஸ்​என் அணிகளும் பலப்​பரீட்சை நடத்​துகின்​றன.

SCROLL FOR NEXT