விளையாட்டு

ரியல் மாட்ரிட் கால்பந்து வீரர் கிளியான் மாப்பே காயம்

செய்திப்பிரிவு

பாரிஸ்: ரியல் மாட்​ரிட் கால்​ பந்து கிளப் அணி​யின் நட்​சத்​திர வீரர் கிளி​யான் மாப்பே இடது முழங்​காலில் காயம் அடைந்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டு அணி​யின் கால்​பந்து ஜாம்​ப​வான்​களில் ஒரு​வர் கிளி​யான் மாப்​பே. தற்​போது பிரான்ஸ் தேசிய அணிக்​காக​வும், ரியல் மாட்​ரிட் கிளப் அணிக்​காக​வும் விளை​யாடி வரு​கிறார்.

இந்​நிலை​யில், கிளி​யான் மாப்​பேவுக்கு ஏற்​பட்​டுள்ள காயம் தொடர்​பாக ஸ்பெ​யின் நாட்​டைச் சேர்ந்த ரியல் மாட்​ரிட் கால்பந்து கிளப் அணி நிர்​வாகம் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யுள்​ள​தாவது: இடது காலில் ஏற்​பட்ட சுளுக்கு காரண​மாக கிளி​யான் மாப்​பேவுக்கு பரிசோதனை நடை​பெற்​றது.

அப்​போது அவரது இடது முழுங்​காலில் காயம் ஏற்​பட்​டுள்​ளது தெரிய​வந்​தது. இதையடுத்து அவருக்கு மருத்​து​வர்​கள் சிகிச்சை அளித்து வருகின்​றனர். அவர் அடுத்த 3 வாரங்​களுக்கு தொடர்ந்து ஓய்​வில் இருப்​பார். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

கடந்த 2025-ம் ஆண்​டில் நடை​பெற்ற பல்​வேறு போட்​டிகளில் கிளியான் மாப்​பே, ரியல் மாட்​ரிட் அணிக்​காக சிறப்​பாக விளையாடி​யிருந்​தார். 2025-ல் ரியல் மாட்​ரிட் அணிக்​காக 59 கோல்​களை அவர் அடித்​திருந்​தார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

இதற்கு முன்பு பாரிஸ் செயின்ட்​-ஜெர்​மைன்​(பிஎஸ்​ஜி) அணிக்​காக விளை​யாடி வந்த கிளி​யான் மாப்பே கடந்த 2024-ம் ஆண்டு ரியல் மாட்​ரிட் அணி​யில் இணைந்​தார்​ என்​பது நினை​விருக்​கலாம்​.

SCROLL FOR NEXT