பி.வி.சிந்து
பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன் தொடர் பிரான்ஸின் பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 22-வது இடத்தில் உள்ள இந்தியாவின் பி.வி. சிந்து ஜப்பானின் ஹினா அகேச்சியுடன் மோதினார்.
இதில் பி.வி.சிந்து 21-10, 20-22, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் சிந்து, உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள தென் கொரியாவின் அன் சே யங்குடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.