டோக்கியோ: ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகத் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள இந்தியாவின் பி.வி.சிந்து 21-14, 21-11 என்ற நேர் செட் கணக்கில் 37-வது இடத்தில் உள்ள மலேசியாவின் வாங் லிங்ஷிங்கை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் துருவ் கபிலா, தனிஷா கிரஸ்டோ ஜோடி 21-16, 21-14 என்ற செட் கணக்கில் ஸ்காட்லாந்தின் அலெக்ஸாண்டர் துன், ஜூலி மேக்பேர்சன் ஜோடியை வீழ்த்தியது. ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி காயம் காரணமாக விலகியது.