விளையாட்டு

புனே கிராண்ட் டூர் 2026 டிராபி சென்னை வருகை

செய்திப்பிரிவு

சென்னை: யூனியன் சைக்​லிஸ்ட் இண்​டர்​நேஷனல் 2.2 பஜாஜ் புனே கிராண்ட் டூர் 2026 சைக்​கிள் பந்​த​யம் வரும் ஜனவரி 19 முதல் 23-ம் தேதி வரை புனே​வில் நடை​பெறுகிறது.

ஆடவருக்​கான எலைட் சாலை சைக்​கிள் பந்​தய​மான இதில் உலகம் முழு​வ​தி​லும் இருந்து வீரர்​கள் பலர் பங்​கேற்க உள்​ளனர். 437 கிலோ மீட்​டரை உள்​ளடக்​கிய இந்த சைக்​கிள் பந்​த​யம் நான்கு கட்​டங்​களைக் கொண்​டது. இந்த போட்​டி​யில் உலகம் முழுவதிலும் இருந்து 28 அணி​கள் பங்​கேற்​கும் என்று எதிர்பார்க்கப்​படு​கிறது. இந்​தியா சார்​பில் 2 அணி​கள் களமிறங்க உள்​ளன.

இந்​நிலை​யில் இந்த போட்​டிக்​கான டிராபி சுற்​றுப்​பயணம் தற்போது நாட்​டின் பல்​வேறு பகு​தி​களில் நடை​பெற்று வரு​கிறது. இதன் ஒரு கட்​ட​மாக நேற்று டிராபி சென்​னைக்கு கொண்டுவரப்பட்டு அறி​முகப்​படுத்​தப்​பட்​டது. நிகழ்ச்​சி​யில் விளையாட்டுத் துறை செய​லா​ளர் அதுல்யா மிஸ்​ரா, எஸ்​டிஏடி உறுப்​பினர் செயலர் மேக்​நாத் ரெட்​டி, மயி​லாப்​பூர் எம்எல்ஏ தா.வேலு, தமிழ்​நாடு சைக்​கிளிங் அசோசி​யேஷன் தலை​வர் எம்​.சு​தாகர், போட்​டி​யின் போட்​டித் தொழில்​நுட்ப இயக்​குநர் பினாகி பைசாக் ஆகியோர் கலந்​து​கொண்​டனர்​.

SCROLL FOR NEXT