சென்னை: சைக்கிளிங் போட்டிகளில் வெற்றி பெற்ற தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு மொத்தம் ரூ.73,500 ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது.
இது தொடர்பாக தமிழ்நாடு சைக்கிளிங் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சைக்கிளிங் போட்டிகளைச் சிறப்பாக நடத்துவதற்கு ஆதரவு அளித்த இந்திய விளையாட்டு ஆணையம், இந்திய சைக்கிளிங் கூட்டமைப்பு, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், காவல் துறையினர், அதிகாரிகள், தன்னார்வலர்கள், பெற்றோருக்கு தமிழ்நாடு சைக்கிளிங் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
கடந்த 21, 22-ம் தேதிகளில் நடைபெற்ற சைக்கிளிங் போட்டிகளில் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு ரூ.73,500 ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.