விளையாட்டு

செஸ் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு!

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எம்ஓபி வைஷ்ணவா மகளிர் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது. இதில் 122 கல்லூரிகள், 100 பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டனர்.

கல்லூரிகளுக்கு இடையேயான போட்டியில் 7 சுற்றுகளில் 6.5 புள்ளிகளை பெற்ற பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த ஃபெமில் செல்லதுரையும், பள்ளி சூப்பர் சீனியர் பிரிவில் 6 சுற்றுகளில் 5 புள்ளிகளை பெற்ற கோபாலபுரம் டிஏவி மகளிர் சீனியர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த தியா ஜெயினும், பள்ளி சீனியர் பிரிவில் 6 சுற்றுகளில் 6 புள்ளிகள் பெற்ற வேலம்மாள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஷன்மதியும் முதலிடத்தைப் பிடித்தனர்.

          

இவர்களுக்கு யு-10 உலக செஸ் சாம்பியனான ஷர்வானிகா பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் சென்னை பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநர் மகாதேவ், எம்ஓபி வைஷ்ணவா மகளிர் கல்லூரி முதல்வர் அர்ச்சனா பிரசாத், உடற்கல்வி இயக்குனர் அமுதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT