விளையாட்டு

உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன் பட்டம் வென்ற அனஹத் சிங்குக்கு பிரதமர் பாராட்டு

மோகன் கணபதி

புதுடெல்லி: உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை அனஹத் சிங் படைத்துள்ளதில் பெருமிதம் கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில், "2026 உலக இளையோர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் ஒரு வரலாற்றுச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

தங்கப் பதக்கம் வென்று, உலக இளையோர் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற முதல் இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்ற அனஹத் சிங்கை நினைத்துப் பெருமிதம் கொள்கிறேன். அவரது இந்தச் சாதனை, இளைஞர்களிடையே ஸ்குவாஷ் விளையாட்டை மேலும் பிரபலப்படுத்தும்." என்று தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "ஸ்குவாஷ் விளையாட்டில் இந்தியா பொன்னான மைல்கல்லைப் பதித்துள்ளது.

2026 உலக ஸ்குவாஷ் ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சரித்திரம் படைத்த அனஹத் சிங்குக்கு வாழ்த்துகள். இந்த மதிப்புமிக்க பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றதன் மூலம், வளரும் ஸ்குவாஷ் வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் ஒரு பொன்னான பாதையை நீங்கள் வகுத்துள்ளீர்கள்." என தெரிவித்துள்ளார்.

க​ன​டா​வின் ஆன்​டாரியோ​வில் உலக ஜூனியர் ஸ்கு​வாஷ் தனி​நபர் சாம்​பியன்​ஷிப் போட்டி நடை​பெற்றது. இதில் மகளிர் பிரிவில் இறுதிப் போட்டியில் எகிப்தின் ருகையா சலீம் உடன் அனஹத் சிங் பலப்பரீட்சை செய்தார்.

இந்த மோதலில் உலகத் தரவரிசை​யில் 20-வது இடத்​தில் உள்ள இந்​தி​யா​வின் அனஹத் சிங் 11-3, 11-7, 11-9 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று பட்டம் வென்றார்.

உலக ஜூனியர் ஸ்கு​வாஷ் தொடரின் போட்​டி​யில் 21 வருடங்களுக்குப் பிறகு கால்​ப​தித்த இந்​தி​யர் என்ற சாதனையை அனஹத் சிங் படைத்​துள்​ளார். கடைசி​யாக 2005-ம் ஆண்டு தமிழகத்​தின் ஜோஷ்னா சின்​னப்பா இறு​திப் போட்​டிக்கு முன்​னேறி​யிருந்​தார். உலக ஜூனியர் ஸ்கு​வாஷ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை அனஹத் படைத்துள்ளார்.

கடந்த 2011 முதல் எகிப்து நாட்டை சேர்ந்த வீராங்கனைகள் மட்டுமே இந்த தொடரில் பட்டம் வென்று வந்தனர். அதனை இப்போது அனஹத் தகர்த்துள்ளார்.

SCROLL FOR NEXT