விளையாட்டு

உலகத் தரம் வாய்ந்த பந்துவீச்சாளராக பிரசித் கிருஷ்ணா உருவெடுத்து வருகிறார்: பயிற்சியாளர் மோர்னே மோர்கல் பாராட்டு

செய்திப்பிரிவு

கொழும்பு: இலங்கைக்கு எதி​ரான 2-வது டெஸ்ட் போட்டி​யின் 3-வது நாள் ஆட்​டத்​தில், வெளிப்​புற விமர்​சனங்​களைப் புறக்கணித்துத் தனது பந்​து​வீச்​சால் இந்​திய அணி​யைக் கைதூக்கி விட்ட வேகப்​பந்து வீச்​சாளர் பிரசித் கிருஷ்ணாவுக்​கு, வேகப்​பந்​து​வீச்​சுப் பயிற்​சி​யாளர் மோர்னே மோர்கல் பாராட்டு தெரி​வித்​துள்​ளார்.

இலங்கை அணிக்கு எதி​ராக கொழும்பு நகரில் நடை​பெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்​டி​யின் 3-வது நாளான நேற்று கட்​டுக்​கோப்​பாகப் பந்​து​வீசிய பிரசித் கிருஷ்ணா 14 ஓவர்​களை 47 ரன்​களை விட்​டுக்​கொடுத்து 3 முக்​கிய விக்​கெட்​டு​களைக் கைப்​பற்றி அசத்தி​னார்.

3-வது நாள் ஆட்​டத்​துக்கு பின்​னர் நடை​பெற்ற செய்​தி​யாளர்​கள் சந்​திப்​பின் போது இந்​திய அணி​யின் வேகப்​பந்து வீச்சு பயிற்சியாள​ரான மோர்னே மோர்​கல் கூறிய​தாவது: ஊடகங்​கள் மற்​றும் வர்​ணனை​யாளர்​களின் விமர்சன பேச்​சுகளை பொருட்படுத்​தாமல், கவனச்​சிதறல்​களைக் கடந்து விளையாடியது பிரசித் கிருஷ்ணா​வின் மன உறு​தியை காட்டுகிறது.

ஒரு இளம் வீர​ராக இந்​திய அணி​யில் காலடி எடுத்து வைக்​கும்​போது, கோடிக்​கணக்​கான ரசிகர்​களை ஈர்க்க வேண்​டும் என்ற அழுத்​த​மும், கடுமை​யான ஆய்​வு​களும் இருக்​கும். ஆனால், பிரசித் கிருஷ்ணா அதையெல்​லாம் தாண்​டித் தனது விளை​யாட்டை ரசித்து விளை​யாடத் தொடங்​கி​யுள்​ளார்.

பிரசித் கிருஷ்ணா தீவிர​மாக கற்​றுக்​கொள்​ளும் ஆர்​வம் கொண்டவர். போட்​டிகளுக்கு முன்​பாக எதிரணி வீரர்​களைப் பற்றி அதிக அளவில் ஆராய்ச்சி செய்து திட்​ட​மிடு​வார். ஆடுகளத்தில் பந்​து​வீச்​சுக்​குச் சாதக​மான சூழல் இல்​லாத​போதும், தனது கூடு​தல் வேகம் மற்​றும் பவுன்ஸ் மூலம் விக்​கெட்​டு​களை கைப்பற்றும் ஆற்​றல் அவரிடம் உள்​ளது. அவர், ஒரு உலகத்​தரம் வாய்ந்த பந்​து​வீச்​சாள​ராக உரு​வெடுத்து வரு​வதைப் பார்ப்​பது மகிழ்ச்சியளிக்​கிறது.

கடந்த 2025-ம் ஆண்டில் இங்​கிலாந்து தொடரில் பிரசித் கிருஷ்ணா அதிக ரன்​களை விட்​டுக்​கொடுத்​திருந்​தார். அணி நிர்​வாகம் அவருக்​குக் கொடுத்த கடின​மான பணி​யைச் செய்​யும்​போது சில போட்​டிகளில் ரன்​கள் செல்​லலாம். ஆனால், முழு அணி​யும் அவருக்​குப் பின்​னால் உறு​துணை​யாக நிற்​கிறது.

கடந்த 2-3 ஆண்​டு​களாக இத்​தகைய சவாலான பணி​களை அவர், சிறப்​பாகச் செய்து வரு​கிறார். தற்​போது சரி​யான ஃபுல்​லர் லென்த் பகு​தி​களில் தொடர்ச்​சி​யாகப் பந்​து​வீசும் திறனைப் பெற்​றுள்ள பிரசித் கிருஷ்ணா, அனைத்து வடிவ கிரிக்​கெட்​டிலும் நீண்ட காலம் இந்​தி​யா​வுக்​காக விளை​யாடும் ஆற்​றல் படைத்தவர். இவ்​வாறு மோர்​னே மோர்​கல்​ கூறி​னார்​.

SCROLL FOR NEXT