விளையாட்டு

உலக சேலஞ்ச் கோப்பை: இந்திய வீராங்கனை பிரணதிக்கு வெள்ளி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: உஸ்பெகிஸ்தானில் நடைபெற்று வரும் எப்ஐஜி உலக சேலஞ்ச் கோப்பை மகளிர் வால்ட் பிரிவில் இந்திய வீராங்கனை பிரணதி நாயக் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இப்போட்டிகள் உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற மகளிர் வால்ட் பிரிவில் இந்தியாவின் பிரணதி நாயக் 13.025 புள்ளிகள் பெற்று 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

வியட்நாமின் தி குயுன் நிஹு குயேன் 13.375 புள்ளிகளுடன் தங்கமும், உஸ்பெகிஸ்தானின் ஷகினாபோனு யூசுபவா 12.950 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனர்.

SCROLL FOR NEXT