விளையாட்டு

2-வது சுற்​றில் பிரக்ஞானந்தா தோல்வி

செய்திப்பிரிவு

ஒஸ்லோ: நார்வே நாட்​டின் ஒஸ்லோ நகரில் நார்வே செஸ் போட்டி நடை​பெற்று வரு​கிறது. இதன் 2-வது சுற்​றில் இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான டி.குகேஷ், அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான வெஸ்லி சோவுடன் மோதி​னார். இந்த ஆட்​டம் 116-வது நகர்த்​தலின் போது டிரா​வில் முடிவடைந்​தது. இதையடுத்து நடைபெற்ற டைபிரேக்​க​ரான ஆர்​மகெ​டானில் வெஸ்லி சோ 27-வது நகர்த்​தலில் வெற்றி பெற்​றார்.

மற்​றொரு இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான ஆர்​.பிரக்ஞானந்தா, பிரான்​ஸின் அலிரேசா ஃபிரோஸ்​ஜாவுடன் மோதி​னார். இதில் 60-வது நகர்த்​தலின் போது அலிரேசா ஃபிரோஸ்ஜா வெற்றி பெற்​றார். உலகின் முதல் நிலை வீர​ரான நார்​வே​யின் மேக்​னஸ் கார்ல்​சன், ஜெர்​மனி​யின் வின்​சென்ட் கீமர் மோதிய ஆட்​டம் 85-வது நகர்த்தலின் போது டிரா ஆனது. இதையடுத்து நடை​பெற்ற ஆர்மகெ​டானில் 41-வது நகர்த்​தலில் கார்ல்​சன் வெற்றி பெற்​றார்.

SCROLL FOR NEXT