தரம்சாலா: ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் இரவு தரம்சாலாவில் நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் மும்பை அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் 2-வது இன்னிங்ஸில் 19-வது ஓவரின் போது மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளரான கெய்ரன் பொலார்டு, 4-வது நடுவரிடம் வாக்குவாதம் செய்தார்.
அப்போது அவர், அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தினார். இதையடுத்து ஐபிஎல் நடத்தை விதிகளின்படி கெய்ரன் பொல்லார்டுக்கு அவரது போட்டி ஊதியத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு தகுதியிழப்பு புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.