விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: 133 ரன்களுக்கு சுருண்டது பாகிஸ்தான் அணி

செய்திப்பிரிவு

பர்மிங்காம்: இங்​கிலாந்து அணிக்கு எதி​ரான கடைசி மற்​றும் 3-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டி​யில் பாகிஸ்​தான் அணி 133 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது.

பர்​மிங்​காமில் நேற்று தொடங்​கிய இந்த டெஸ்ட் போட்​டி​யில் முதலில் பேட் செய்த பாகிஸ்​தான் அணி 33.5 ஓவர்​களில் 133 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக சவுத் ஷகீல் 47 பந்​துகளில், 7 பவுண்​டரி​களு​டன் 43 ரன்​கள் சேர்த்​தார். முகமது அப்​பாஸ் 21, ரஸதுல்லா 11 ரன்​கள் எடுத்​தனர்.

சைம் அயூப் 0, அஸான் அவாய்ஸ் 9, அப்​துல்லா ஷபிக் 3, ஷான் மசூத் 5, கேப்​டன் பாபர் அஸம் 7, காஸி ஹோரி 4, முகமது இம்​ரான் 5 ரன்​களில் நடையை கட்​டினர். முகமது அலி 5 ரன்​கள் சேர்த்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார். இங்​கிலாந்து அணி தரப்​பில் ஜோஷ் டங்க் 4 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார்.

ஆலி ராபின்​சன், ஜோப்ரா ஆர்ச்​சர் ஆகியோர் தலா 3 விக்​கெட்​களை கைப்​பறறினர். இதையடுத்து பேட் செய்த இங்​கிலாந்து அணி 10 ஓவர்​கள் வீசப்​பட்ட நிலை​யில் 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 35 ரன்​கள் எடுத்​திருந்​தது. பென் டக்​கெட் 11, ஜோர்​டான் காக்ஸ் 4 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தனர். எமிலியோ கே 6, கேப்​டன் ஜோ ரூட் 8 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தனர்​.

SCROLL FOR NEXT