புதுடெல்லி: இங்கிலாந்துடன் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணியில் மீண்டும் ஜஸ்பிரீத் பும்ரா, விராட் கோலி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
இந்திய அணி வரும் ஜூலை 1-ம் தேதி முதல் ஜூலை 19-ம் தேதி வரை இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள், டி20 தொடரில் விளையாடவுள்ளது. ஒருநாள் போட்டித் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்துள்ளது. இதில் இடம்பெற்றுள்ள விராட் கோலி, காயத்திலிருந்து குணமடைந்தால் போட்டியில் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி விவரம்: ஷுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல், இஷான் கிஷன், வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், நிதிஷ்குமார் ரெட்டி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், குர்னூர் பிரார்.
அயர்லாந்துடனான டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணி விவரம்: ஸ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஷிவம் துபே, திலக் வர்மா, நிதிஷ்குமார் ரெட்டி, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், பிரின்ஸ் யாதவ், வைபவ் சூர்யவன்ஷி, பிரசித் கிருஷ்ணா.