சஞ்சு சாம்சன்
மும்பை: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி வரும் 23 முதல் 26-ம் தேதி வரையில் மூன்று ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாட ஜிம்பாப்வே அணி உடன் விளையாட உள்ளது. ஜிம்பாப்வே நாட்டில் நடைபெறும் இந்த தொடருக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. இதில்தான் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி முதல் பிப்ரவரி முதல் மார்ச் வரை நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் மொத்தமாக 321 ரன்கள் எடுத்திருந்தார் சஞ்சு சாம்சன். அதன் மூலம் தொடர் நாயகன் விருதை அவர் வென்றார். அதன் பின்னர் நடைபெற்ற ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான சீசனில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி 477 ரன்கள் எடுத்தார். இதில் 2 சதங்கள் அடங்கும்.
இந்நிலையில், இதன் பிறகு நடைபெற்ற அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடரில் மூன்று ஆட்டங்களில் விளையாடிய அவர், ரன் சேர்க்க தடுமாறினார். இந்த சூழலில் அவருக்கு அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
சாம்சனுக்கு மாற்றாக விக்கெட் கீப்பரும், தொடக்க ஆட்டக்காரருமான பிரப்சிம்ரன் சிங் அணியில் இடம்பெற்றுள்ளார். முதல் முறையாக இந்திய அணியில் அவர் இடம்பிடித்துள்ளார்.
ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி
ஷ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் சர்மா, திலக் வர்மா (துணை கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, சூர்யான்ஷ் ஷெட்கே, ரிங்கு சிங், ஹர்ஷ் துபே, வருண் சக்கரவர்த்தி, பிரின்ஸ் யாதவ், யஷ் தாக்குர், அசோக் சர்மா, மயங்க் யாதவ், பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்).