விளையாட்டு

பாக். வீரர்களுக்கு அபராதம் இல்லை

செய்திப்பிரிவு

லாகூர்: ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் அரை​யிறு​திக்​குத் தகுதி பெறாததற்​காக, பாகிஸ்​தான் அணி​யின் வீரர்​களுக்கு அபராதம் விதிக்​கப்​பட்​ட​தாக செய்​தி​கள் வெளி​யாகி இருந்​தன. இதை பாகிஸ்​தான் கிரிக்​கெட் வாரி​யம் மறுத்​துள்​ளது.

இது குறித்து பாகிஸ்​தான் கிரிக்​கெட் வாரிய செய்​தித் தொடர்​பாளர் ஆமிர் மிர் கூறும்​போது, “எந்த வீரருக்​கும் அபராதம் விதிக்​கப்​பட​வில்​லை. ஆனால், வீரர்​கள் சிறப்​பாகச் செயல்​படும்​போது அவர்​களுக்கு ஏராள​மான ஊக்​கத்​தொகைகள் வழங்​கப்​படு​வ​தால், அவர்​களின் செயல்​பாடு​களுக்கு ஏற்ப ஒரு புதிய திட்​டத்தை உரு​வாக்​கு​வது குறித்து வாரி​யம் ஆலோ​சித்து வரு​கிறது.

          

பாகிஸ்​தான் அணி​யில் உள்ள ஒவ்​வொரு வீரரும் தற்​போது எங்​கள் நாட்டு மதிப்​பில் சுமார் 6 முதல் 7 கோடி வரை சம்​பா​திக்​கின்​றனர். எனவே அவர்​களின் செயல்​திறன்​களுக்கு அவர்​களைப் பொறுப்​பாக்​கு​வது குறித்து வாரி​யம் சிந்​தித்து வரு​கிறது. ஆனால் எது​வும் இன்​னும் இறுதி செய்​யப்​பட​வில்​லை” என்​றார்.

SCROLL FOR NEXT